அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் உற்பத்தி இந்தியாவின் பாராமதி என்ற இடத்தில் துவக்கம்

By Ravichandran

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் உற்பத்தி மஹாராஷ்டிராவின் பாராமதி என்ற இடத்தில் துவங்கியுள்ளது.

பாராமதியில் உற்பத்தி துவங்கபட்டுள்ள அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் பற்றி...

எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் பற்றி...

எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தான் அப்ரிலியா நிறுவனம் சார்பாக, இந்தியாவில் தயாரிக்கபடும் முதல் தயாரிப்பு ஆகும்.

இந்த ஸ்கூட்டர் கடந்த மாதம் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், மஹாராஷ்டிராவில் உள்ள பாராமதி என்ற இடத்தில் உற்பத்தி செய்யபடுகிறது.

ஸ்டைல், பெர்ஃபார்மன்ஸ்;

ஸ்டைல், பெர்ஃபார்மன்ஸ்;

எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், மிகவும் ஸ்டைல் நிறைந்த மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் ஆகும்.

அப்ரிலியா நிறுவனம் மூலம், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும் இந்த ஸ்கூட்டரின் பெர்ஃபார்மன்ஸ் (செயல்திறன்) தான் இதன் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

வெஸ்பா 150 சிசி இஞ்ஜின் தான், அப்ரிலியாவின் முதல் ஸ்கூட்டருக்கு வழங்கபட உள்ளது.

இந்த 150 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின், 11.40 பிஹெச்பியையும், 11.50 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எனினும், அப்ரிலியா இஞ்ஜினியர்கள், இந்த ஸ்கூட்டருக்கு தேவையான பிரத்யேகமான மேம்பாடுகள் மற்றும் கூடுதல் திறன் வெளிபடுத்தும் வகையில் மாற்றி அமைக்க உள்ளனர்.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

அப்ரிலியா நிறுவனம் தங்களின் முதல் ஸ்கூட்டரை பிரிமியம் மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்கூட்டராக அறிமுகம் செய்கின்றனர்.

இது இளைய தலைமுறையினரை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டு அறிமுகம் செய்யபட உள்ளது.

விலைஉயர்ந்த ஸ்கூட்டர்;

விலைஉயர்ந்த ஸ்கூட்டர்;

இந்திய வாகன சந்தைகளில் அறுமுகம் செய்யபடும் போது, அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தான் மிகவும் விலை உயர்ந்த ஸ்கூட்டராக இருக்கும்.

வண்ணங்கள்;

வண்ணங்கள்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும் போது, அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், பிளாக் மற்றும் வெள்ளை ஆகிய 2 ஷேட்களில் காட்சிபடுத்தபட்டது.

பிரேக்;

பிரேக்;

பிரேக்குகளை பொருத்த வரை, அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் முன் சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக்குகளும், பின் சக்கரங்களுக்கு டிரம் பிரேக்குகளும் வழங்கபட்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், அப்ரிலியா மூலம் வடிவமைக்கபட்ட ஸ்டைலாக காட்சி அளிக்கும் அல்லாய் சக்கரங்களை கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

முன்னதாக உறுதி செய்யபட்ட படி, இந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யபட உள்ளது.

விலை;

விலை;

விலைகளை பொருத்த வரை, அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் சுமார் 1 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யபடலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பியாஜியோவின் அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டருக்கு வெஸ்பா இஞ்ஜின்!

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
Story first published: Thursday, March 10, 2016, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X