புதிய அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய அப்ரிலியா எஸ்ஆர்150ஆர் ஸ்கூட்டரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டிருக்கிறது. பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் இந்த ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்தநிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள பாராமதியில் உள்ள பியாஜியோ ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து முதல் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் நேற்று வெளிவந்தது. அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவின் மகாராஷ்டிராவில் பாராமதி என்ற இடத்தில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யபட்டு, முதல் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் வெளியிடப்படும் நிகழ்ச்சியில் பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சீஇஓ ஸ்டெஃபேனோ பெல்லே பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சி, ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்றது.

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தான், இந்தியாவின் முதல் கிராஸ்ஓவர் பைக் என அப்ரிலியா நிறுவனம் அழைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 154.4 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 7,000 ஆர்பிஎம்களில் 11.3 பிஹெச்பியையும், 5,500 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 11.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

டேங்க்;

டேங்க்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, 2 பக்கத்திலும் 120/70 செக்ஷன் 14 இஞ்ச் அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் சச்பென்ஷனும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிரேக்;

பிரேக்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் ட்வின் பிஸ்டன் கேளிப்பர்கள் உடைய 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 220 மில்லிமீட்டர் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஸ்டீல் ஃபிரேம் ஸ்ட்ரக்சர், ட்வின் பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியூப்லஸ் டயர்கள் மற்றும் ஆர்எஸ்வி4 (RSV4) பிரபாவம் கொண்ட ஸ்டைலிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் சிற்பி அம்சங்ககாக உள்ளன.

புக்கிங்;

புக்கிங்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கான புக்கிங், ஏற்கனவே வெஸ்பா ஷோரூம்களில் துவங்கிவிட்டது. 5,000 ரூபாய் புக்கிங் கட்டணம் செலுத்தப்படும் பட்சத்தில், இதன் புக்கிங் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் www.paytm.com என்ற இணையதளம் மூலமாகவும், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை புக் செய்து கொள்ள முடியும்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், விற்பனைக்கு வரும் போது, மேட் பிளாக் மற்றும் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

போட்டி;

போட்டி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, போட்டி போல் இந்தியாவில் எந்த வாகனமும் இல்லை.

இதற்கு முக்கிய காரணம், இதை தவிர, இதன் இணை மாடலான வெஸ்பா ஸ்கூட்டர் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் மற்றொரு 150 சிசி ஸ்கூட்டர் ஆகும்.

விலை;

விலை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 65,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஷோரூமிற்கு வந்தடைந்தது - குறைந்த விலை புக்கிங்கிற்கு முந்துங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் படங்கள் வெளியாகியது - இந்தியாவிற்கு வருமா?

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Piaggio Vehicles Private Limited (PVPL) rolled out its very first Aprilia SR 150 Scooter from its Baramati plant in Maharashtra, India. Stefano Pelle, CEO and Managing Director of Piaggio India also participated in this occasion. Aprilia calls their SR 150 Scooter as India's first "crossover bike". Pre-bookings for SR 150 are also done through Paytm.com. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark