அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் ப்ரீ-புக்கிங் துவக்கம்

By Ravichandran

பியாஜியோ நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் புக்கிங், வெஸ்பா ஷோரூம்களில் துவங்கிவிட்டது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கும் ஸ்கூட்டர் ஆகும்.

முன்னதாக, இது 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்த வருடம் வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என அப்ரிலியா தெரிவித்திருந்தது.

ப்ரீ-புக்கிங்;

ப்ரீ-புக்கிங்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் துவங்கி, ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக பியாஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புக்கிங், வெஸ்பா ஷோரூம்கள் மூலம் ஏற்கபட்டு வருகிறது.

புக்கிங் முறை;

புக்கிங் முறை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கான புக்கிங் 2,000 ரூபாய் என்ற டோக்கன் புக்கிங் கட்டணம் செலுத்தும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்களுக்கென, வெஸ்பா ஷோரூம்களில் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட இடம் ஒதுக்கப்படும் என டீலர்ஷிப்கள் தெரிவிக்கின்றன.

அறிமுக விலை;

அறிமுக விலை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 65,000 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என பியாஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

போட்டி;

போட்டி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, இந்திய வாகன சந்தைகளில், நேரடி போட்டி போல் எந்த வாகனமும் இல்லை. வெறும் வெஸ்பா மட்டும் தான் 150 சிசி ஸ்கூட்டரை இந்திய வாகன சந்தைகளில் வழங்கி வருகிறது.

செக்மென்ட் முன்னோடியான ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 125 ஸ்கூட்டரையும், சுஸுகி நிறுவனம் ஆக்சஸ் 125 ஸ்கூட்டரையும் வழங்கி வருகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 150சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

ஆனால், இது வரை பியாஜியோ நிறுவனம், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் செயல் திறன் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

வெஸ்பா ஸ்கூட்டரில் உபயோகிக்கப்படும் அதே 150சிசி இஞ்ஜினையே, பியாஜியோ குழுமம், இந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் பகிர்ந்து வருகிறது.

உற்பத்தி;

உற்பத்தி;

பியாஜியோ நிறுவனம், இந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை, மகாராஷ்டிராவின் பாராமதி என்ற இடத்தில் உற்பத்தி ஆலையில் தயாரித்து வருகிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் தான், இத்தகைய சவாலான விலையில் அளிக்க முடிவதாக கூறப்படுகிறது.

முதல் வாகனம்;

முதல் வாகனம்;

இது தான், அப்ரிலியா பிராண்ட்டில் தயாரிக்கப்படும் வெகுஜன இரு சக்கர வாகனமாக உள்ளது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இதன் இலக்கு வாடிக்கையாளர்களான இளைய தலைமுறையினரிடையே பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் உற்பத்தி இந்தியாவின் பாராமதி என்ற இடத்தில் துவக்கம்

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரின் விலை வெளியீடு... வெஸ்பாவைவிட குறைவு!

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Aprilia said, it would launch their SR 150 scooter in Indian market during August 2016. Italian-based manufacturer announced that, it is accepting pre-bookings across India. Bookings for Aprilia SR 150 is being accepted via Vespa Showrooms. Bookings at Vespa showrooms are being accepted for token amount of Rs. 2,000. To know more, check here...
Story first published: Monday, July 25, 2016, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X