அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவில் ஆகஸ்ட் 22-ல் அறிமுகம்

Written By:

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ வெஹிகிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (Piaggio Vehicles Private Limited (PVPL)) அல்லது பியாஜியோ நிறுவனம் என அழைக்கப்படும் நிறுவனம் தான், தங்களின் அப்ரிலியா பிராண்டின் கீழ் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை தயாரிக்கின்றனர்.

இந்திய வாகன சந்தைகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தான், இந்தியாவின் முதல் கிராஸ்ஓவர் பைக்காக விளங்கும் என என அப்ரிலியா நிறுவனம் தெரிவிக்கிறது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்திய வாகன சந்தைகளில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி செய்யப்படுவது உறுதி ஆகிவிட்டது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவில் உள்ள பல்வேறு வாகன சந்தைகளில், ஒன்றன்பின் ஒன்றாக தான் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறன.

இதற்கிடையில், அப்ரிலியா நிறுவனம், எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

புக்கிங்;

புக்கிங்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் புக்கிங், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வெஸ்பா ஷோரூம்களிலும் ஏற்கப்பட்டு வருகிறது. 5,000 ரூபாய் புக்கிங் கட்டணம் செலுத்தும் பட்சத்தில், இதன் புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், www.paytm.com என்ற இணையதளம் மூலமாகவும், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை புக் செய்து கொள்ள முடியும்.

இதன் டெலிவரி, விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

விலை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 65,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் தான், அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் வழங்கும் முதல் தயாரிப்பு என்பதால் இந்த விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

எனினும், இதன் விலைகள் பெரிய அளவில் உயரத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் ரைட்;

டெஸ்ட் ரைட்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, டெஸ்ட் ரைட் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, வெஸ்பாவிடம் இருந்து பெறப்பட்ட, சிங்கிள் சிலிண்டர் உடைய 154.4 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

பிஎஸ்-4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமான இந்த இஞ்ஜின், 7,000 ஆர்பிஎம்களில் 11.3 பிஹெச்பியையும், 5,500 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 11.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டேங்க்;

டேங்க்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, 2 பக்கத்திலும் 120/70 செக்ஷன் 14 இஞ்ச் அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் சச்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் ட்வின் பிஸ்டன் கேளிப்பர்கள் உடைய 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 220 மில்லிமீட்டர் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஸ்டீல் ஃபிரேம் ஸ்ட்ரக்சர், ட்வின் பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியூப்லஸ் டயர்கள் மற்றும் ஆர்எஸ்வி4 (RSV4) பிரபாவம் கொண்ட ஸ்டைலிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், மேட் பிளாக் மற்றும் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

போட்டி;

போட்டி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, போட்டி போல் இந்தியாவில் எந்த வாகனமும் இல்லை.

இதை தவிர, இதன் இணை மாடலான வெஸ்பா ஸ்கூட்டர் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் மற்றொரு 150 சிசி ஸ்கூட்டர் ஆகும்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவின் மகாராஷ்டிராவில் பாராமதி என்ற இடத்தில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யபடும், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள், பிற வெளிநாட்டு வாகன சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் படங்கள் வெளியாகியது - இந்தியாவிற்கு வருமா?

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Aprilia India has confirmed that, they will launch their Aprilia SR150 scooter on August 22, 2016 in India. SR150 scooter from Aprilia is priced attractively with an introductory offer price of Rs. 65,000 ex-showroom (Pune). Aprilia SR150 can be booked at Vespa dealerships pan India. SR150 will be introduced in India in phased manners. To know more, check here...
Story first published: Thursday, August 18, 2016, 11:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark