ஏதர் எஸ்340... இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

By Ravichandran

ஏதர் எனர்ஜி நிறுவனம், அம்சமாக காட்சி அளிக்கும், எஸ்340 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஏதர் மற்றும் எஸ்340 பற்றி...

ஏதர் மற்றும் எஸ்340 பற்றி...

ஏதர் எனர்ஜி என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனம், வன்பொருள் சம்பந்தபட்ட துவக்கநிலை நிறுவனம் ஆகும்.

இந்த ஏதர் எனர்ஜி நிறுவனம் தான், பெங்களூரூவில் நடந்த சர்ஜ் என்ற இணைய மாநாட்டு நிகழ்ச்சியில், எஸ்340 என்ற ஸ்மார்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளனர்.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், நகர்ப்புறங்களில் வாழும் வருங்கால நோக்குடைய தயாரிப்புகளை விரும்பும் தொழில்நுட்ப பிரியர்களை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், மாசு உமிழ்வு இல்லாத மற்றும் சுற்றுசூழலுக்கு இணக்கமான வாகனமாகும்.

டேஷ்போர்ட்;

டேஷ்போர்ட்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், 24 மணிநேரமும் தொடர்பு வசதி கொண்ட டச்ஸ்கிரீன் டேஷ்போர்டு கொண்டுள்ளது. மேலும், இதில் ஆன் - போர்டு நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது.

சார்ஜிங்;

சார்ஜிங்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், 5A வழக்கமான சாக்கெட் மூலம் ஒரு முறை சார்ஜிங் செய்தால் கூட 60 கிலோமீட்டர் தூரம் வரை செல்லலாம்.

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள லித்தியம்-இயான் பேட்டரி பேக்கை, ஃபாஸ்ட் சார்ஜிங் மோட்-டில் ஒரு மணி நேரத்திற்கு சார்ஜிங் செய்தால், 80% சார்ஜிங் ஆகிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், அதிகப்படியாக ஒரு மணிக்கு 72 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், ஸ்போர்டியான தோற்றம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், ஸீரோ லேடரல் வெய்ட் ஆஃப்செட், தாழ்ந்த செண்டர் ஆஃப் கிராவிட்டி, சுற்றுப்புற ஒளி நிலைமைகளுக்கு ஏற்றவாறு தானாகவே மாறிக்கொள்ளும் உள்ளுணர்வு கொண்ட எல்.ஈ. டி விளக்குகள் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்;

தொழில்நுட்ப அம்சங்கள்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டரின் டச்ஸ்கிரீன் அடிப்படையிலான டேஷ்போர்ட், நுகர்வோரின் சவாரி அனுபவத்தை மேம்படுத்த, கிளவுட் அடிப்படையிலான டேட்டா-வுடன் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

மேலும், இதில் புரொஃபைல் அடிப்படையிலான ஸைன் - இன், ஆன்-போர்ட் நேவிகேஷன் உள்ளது.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், ஸ்போர்ட் மற்றும் எகானமி என்ற இரு ப்ரீ-கான்ஃபிக்யூர்ட் (ஏற்கனவே செட் செய்யபட்ட) டிரைவ் மோட்கள் கொண்டுள்ளது.

எஸ்340 மொபைல் ஆப்;

எஸ்340 மொபைல் ஆப்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், எஸ்340 மொபைல் ஆப்-புடன் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

இதனால், எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டரை இயக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் ரைட் (வாகன இயக்கம்), புரொஃபைல் தேர்வுகள் மற்றும் நேவிகேஷன் தடங்களை சிங்க் செய்து கொள்ள முடிகிறது.

விற்பனை விதம், சர்வீஸ்;

விற்பனை விதம், சர்வீஸ்;

எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர், கர்நாடகாவின் பெங்களூரூவில் உற்பத்தி செய்யபடுகிறது.

இது ஆன்லைன் முறையில் மட்டுமே விற்கபட உள்ளது. மேலும், எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டரை தயாரிக்கும் ஏதர் நிறுவனம், டோர்ஸ்டெப் டெலிவரி மற்றும் சர்வீஸ் வழங்குகிறது.

எங்கு கிடைக்கும்?

எங்கு கிடைக்கும்?

ஏதர் எனர்ஜி, இந்த எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டரின் புக்கிங்களை, பெங்களூரு, சென்னை மற்றும் பூனே ஆகிய நகரங்களில் அடுத்த காலாண்டுக்குள் துவங்க உள்ளது.

இயக்கி பழக வாய்ப்பு;

இயக்கி பழக வாய்ப்பு;

மேலும், இந்த எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் போன்ற முறைகளில் இயக்கி பழக, அடுத்த சில மாதங்களில் ஆங்காங்கே எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் அமைக்கபட உள்ளது.

குறிக்கோள்;

குறிக்கோள்;

ஏதர் எனர்ஜி, தங்கள் சேவைகளை விரிவுபடுத்த உள்ள அனைத்து நகரங்களிலும், அரசுடனும், தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பொது சார்ஜிங் மையங்களை ஏற்படுத்த திட்டம் கொண்டுள்ளது.

சீஈஓ கருத்து;

சீஈஓ கருத்து;

இந்த எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து, ஏதர் எனர்ஜியின் சீஈஓ மற்றும் இணை-நிறுவனறான தருன் மேஹ்தா மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

வருங்காலம் நன்கு இணைக்கபட்டதாக இருக்கும் என்றும், இந்த தத்துவத்திற்கு ஆதாராமாக எஸ்340 ஸ்மார்ட் ஸ்கூட்டர் விளங்குகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் துள்ளியமான இஞ்ஜினியரிங் நிபுனத்துவத்துடன் உருவாக்கபட்டுள்ளது என தருன் மேஹ்தா தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Ather Energy, a hardware startup company has unveiled the India's first Smart Electric Scooter named S340. This Peppy looking Eco Friendly Smart Electric Scooter was unveiled at the web summit, SURGE in Bangalore. This scooter is designed targeting the urban tech lovers, who are curious about futuristic products.
Story first published: Wednesday, February 24, 2016, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X