ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக, களமிறங்கும் பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள்கள்

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு போட்டியாக சில இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் திட்டங்கள் குறித்த விவரங்களை, வரும் ஸ்லைடரில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

ராயல் என்பீல்டுக்கு போட்டியா?

ராயல் என்பீல்டுக்கு போட்டியா?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய இரு சக்கர வாகன சந்தைகளில் ஏராளமான வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது தான், முதல் முறையாக, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக புதிய வாகனங்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் களமிறக்க முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

மாடலின் பெயர்?

மாடலின் பெயர்?

ராயல் என்பீல்டுக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ள மோட்டார்சைக்கிளின் பெயர் தற்போதைக்கு சிஎஸ்400 மோட்டார்சைக்கிள் என பெயரிடபட்டுள்ளது.

முன்னதாக, இந்த சிஎஸ்400 மோட்டார்சைக்கிள், 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிபடுத்தபட்டது.

பெயர் மாற்றம்;

பெயர் மாற்றம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிஎஸ்400 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, அது ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு சவால் விடும் விதமாக அதன் பெயர்களும் மாற்றம் செய்யபடும்.

இந்த புதிய சிஎஸ்400 மோட்டார்சைக்கிள், நிச்சயமாக குரூஸர் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இது எக்கசக்கமான கெத்தான அம்சங்களை கொண்டிருக்கும்.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

தற்போது தங்களிடம் உள்ள பிளார்ஃபார்ம்களை, அதன் புதிய பிராண்டான சிஎஸ்400 மோட்டார்சைக்கிளுக்கு உபயோகிக்க முடியாது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

உணர்ந்துள்ளது.

எனவே, சிஎஸ்400 மோட்டார்சைக்கிளுக்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கும் என தெரிகிறது.

பஜாஜ் அவென்ஜர் பெயர்?

பஜாஜ் அவென்ஜர் பெயர்?

பஜாஜ் அவென்ஜர், வெகுஜன மக்களுக்கான இரு சக்கர வாகனமாக உள்ளது. இதனால், இந்த சிஎஸ்400 மோட்டார்சைக்கிளுக்கு அவென்ஜர் மாடலின் பெயர் உபயோகிக்கபடாது என தகவல்கள் வெளியாகின்றன.

குரூஸர் செக்மண்ட்;

குரூஸர் செக்மண்ட்;

இந்திய வாகன சந்தைகளின் குரூஸர் செக்மண்ட்டில், ராயல் என்பீல்டு தான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பஜாஜ் அவென்ஜர், மற்றொரு செக்மண்ட்டில் முன்னோடியாக விளங்குகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதற்கென பிரத்யேக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு சவால்;

ராயல் என்பீல்டுக்கு சவால்;

இந்திய வாகன சந்தைகளிலும், பலவேறு சர்வதேச வாகன சந்தைகளிலும், சிஎஸ்400 மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி முதல் 500 சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

பஜாஜ் மோட்டார்சைக்கிளுக்கான போட்டி?

பஜாஜ் மோட்டார்சைக்கிளுக்கான போட்டி?

யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 3 குரூஸர் பைக்குகளை அறிமுகம் செய்தது.

யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்த 3 மோட்டார்சைக்கிள்களும், இந்திய வாகன சந்தைகளில், பஜாஜ் அவென்ஜர் போன்ற மாடல்களுடன் போட்டியாக விளங்குமே தவிர ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு போட்டியாக விளங்காது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், ஃபிப்ரவரி 1-ல் அறிமுகம்?

ராயல் என்பீல்டு தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Bajaj Auto is working on Royal Enfield Rival for Indian Market. Bajaj would be first two-wheeler manufacturer to rival Royal Enfield genuinely. As and when CS400 motorcycle is launched in India, it would be renamed to take on Royal Enfield. CS400 based motorcycle would take on the Royal Enfield's' 350 to 500cc motorcycles. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X