பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் வரிசையில் புதிய தயாரிப்புகள் அறிமுகம் - முழு விவரம்

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தாங்கள் வழங்கி வரும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் போன்றே, இன்னும் சில மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருங்கால திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம், அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பஜாஜ் வி15, விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இதை போன்றே வேறு சில மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

இது குறித்து, ராஜீவ் பஜாஜ் பெருமிதத்தோடு பல்வேறு கூடுதல் தகவைகளை தெரிவித்தார்.

"பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளுக்காக நாங்கள் உருவாக்கிய இந்த வி பிளாட்ஃபார்ம் மூலம், அதிகப்படியான ஆதாயம் எடுக்க முயற்சித்து வருகிறோம். பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்த வரவேற்ப்பை அடிப்படையாக கொண்டு, 2016 ஏப்ரல் முதல் மார்ச் 2018 வரை, மேலும் சில புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, இந்த கம்யூட்டர் செக்மென்ட்டில், எங்களுக்கு என தனி இடத்தை பிடிக்கும் குறிக்கோளுடன் உள்ளோம்" என ராஜீவ் பஜாஜ் கூறினார்.

வி20 அல்லது வி40?

வி20 அல்லது வி40?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், விரைவில் வெளியிட உள்ள மோட்டார்சைக்கிள்கள், வெளியிட உள்ள இந்த மோட்டார்சைக்கிள்கள், 200 சிசி கொள்ளளவு கொண்ட 200 சிசி வி20 அல்லது 400 சிசி கொள்ளளவு கொண்ட 400 சிசி வி40 மோட்டார்சைக்கிள் என்ற பெயர் கொண்டவைகளாக இருக்குமா என்ற யூகங்கள் இப்போதே துவங்கிவிட்டது.

இதற்கு முக்கிய காரணமே, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்த 200 சிசி மற்றும் 400 சிசி கொள்ளளவுகள் அடிப்படையிலான மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வழங்கி வருகிறது.

எப்போது அறிமுகம்;

எப்போது அறிமுகம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தயாரித்து வழங்க உள்ள இந்த புதிய தயாரிப்புகள், எப்போது வெளியாகும் என்பது குறித்து, எந்த விதமான தெளிவான தகவல்களும், இது வரை வெளியாகவில்லை.

யூகம்;

யூகம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், நவம்பர் மாத வாக்கில் ஒரு புதிய அறிமுகமும், அதற்கு அடுத்த 6 மாதங்களில் மற்றொரு புதிய அறிமுகத்திற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

ஆனால், என்ன பெயரில் இந்த 2 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம், எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த வி பிளாட்ஃபார்ம் அடிப்படையாக கொண்டு, வேறு சில புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்!

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்!

பஜாஜ் வி பைக், இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பலின் மீதங்களில் இருந்து தயாரிக்கபட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூருகிறது.

விமான தாங்கி போர் கப்பலாக விளங்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்-திற்கு மரியாதை செல்லுத்தும் விதமாகவே, இதன் மீதங்கள் கொண்டு, இந்த வி பைக் தயாரிக்கபடுவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் தான் இந்தியாவிலேயே உருவாக்கபட்ட முழு முதல் போர்விமானம் தாங்கி கப்பல் என்பது குறிப்பிடதக்கது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், 150சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது, 3000 ஆர்பிஎம்-களில் 12 என் எம் டார்க்கை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

இதன் உச்சபட்ச திறனான 13 பிஹெச்பி-யை 7,500 ஆர்பிஎம்-களில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், 150சிசி இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சிங்கிள் சீட்டர்;

சிங்கிள் சீட்டர்;

இந்த பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், 2 பேர் அமரக்கூடிய வகையிலான பைக் ஆகும்.

வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால் இந்த பைக்-கின் பாடி நிறத்திலான கௌல் கொண்டு ரியர் சீட்-டை மூடி மறைத்து விட்டால், சிங்கிள் சீட்டர் போல் காட்சி அளிக்கிறது.

நிறங்கள்;

நிறங்கள்;

பஜாஜ் வி பைக், எபோனி பிளாக் மற்றும் பெர்ல் வைட் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் அறிமுகம்: முழுமையானத் தகவல்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Possibililties are there that, Bajaj Auto might launch few more Motorcycles based on Bajaj V15. Bajaj V15 was built on V platform. As Bajaj V15 Motorcycle became big hit, Bajaj Auto is planning to launchfew more Motorcycles, based on V platform. Even as of now, there are predictions that, could these Motorcyles be 200cc V20 or a 400cc V40? --- To know more, check here...
Story first published: Monday, July 11, 2016, 13:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark