பஜாஜ் சிஎஸ்400 பைக்கின் சோதனைகளின் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியீடு

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் சிஎஸ்400 பைக், இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யபட்டபோது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியிடபட்டது.

பஜாஜ் சிஎஸ்400 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் சிஎஸ்400 பைக்...

பஜாஜ் சிஎஸ்400 பைக்...

பஜாஜ் சிஎஸ்400 பைக், இந்திய வாகன சந்தைகளில் பெரிய அளவில் எதிர்பார்க்கபடும் 2 சக்கர வாகனம் ஆகும்.

இது ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக களம் இறக்கபடும் வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்பை படங்கள்...

ஸ்பை படங்கள்...

பஜாஜ் சிஎஸ்400 பைக், பலத்த உருமறைப்பு (கேமோஃப்லாஜ்) செய்யபட்டு இந்திய சாலைகளில் சோதனை செய்யபட்டது.

இதன் அம்சங்களை மறைக்க பலத்த வைட் கேமோ பெயிண்ட் ஜாப் செய்யபட்டிருந்தது. அப்படி இருந்த போதும், இந்த பெயிண்ட் வேலைப்பாடுகளையும் மீறி நமது பார்வையில் பட்ட விஷயங்கள் குறித்து இனி விரிவாக தெரிந்து கொள்வோம்.

ஹேண்டில் பார்;

ஹேண்டில் பார்;

பஜாஜ் சிஎஸ்400 பைக், சிங்கிள் பீஸ் ஹேண்டில் பார் கொண்டுள்ளது.

ஃப்யூவல் டேங்க்;

ஃப்யூவல் டேங்க்;

பஜாஜ் சிஎஸ்400 பைக், செதுக்கபட்டது போன்ற ப்யூவல் டேங்க கொண்டுள்ளது. இந்த பைக்கின் 2 டிஸ்பிளேகளில் ஒரு டிஸ்பிளே இதன் ஃப்யூவல் டேங்க் மீது உள்ளது.

சீட்;

சீட்;

பஜாஜ் சிஎஸ்400 பைக், ஸ்டெப்ட் யூனிட் எனப்படும் அடுக்ககளினால் ஆனது போன்ற அமைப்பில் உள்ளது.

ரியர்;

ரியர்;

பஜாஜ் சிஎஸ்400 பைக்கின் பின் பகுதியில் உள்ள ட்வின் டெயில் லேம்ப்கள், 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காணப்பட்ட கான்செப்ட் மாடலில் இருந்தப்படியே தொடரபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சோதனைக்கு பிரயோகிக்கபட்ட பஜாஜ் சிஎஸ்400 பைக்கின் முன்பக்கத்தில் வழக்கமான ஃப்ரண்ட் போர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோஷாக் போர்க்குகளும் வழங்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

பஜாஜ் சிஎஸ்400 பைக், முன் பக்கதிலும், பின் பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது. இதற்கு ஏபிஎஸ் வசதி வழங்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் சிஎஸ்400 பைக்கிற்கு, கேடிஎம் 390 டியூக் பைக்கில் இருந்து பெறப்படுகிறது. இந்த பைக், 373.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், கேடிஎம் 390 டியூக் பைக்கில் 44.4 பிஹெச்பியையும், 35 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்த பஜாஜ் சிஎஸ்400 பைக், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபடலாம்.

போட்டி;

போட்டி;

பஜாஜ் சிஎஸ்400 பைக், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும் போது, கேடிஎம் 390 டியூக், பெனெல்லி டிஎன்டி 300, ராயல் என்பீல்டு 350 ஆகிய வாகனங்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக, களமிறங்கும் பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள்கள்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் விரைவில் விற்பனைக்கு வருகிறது

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;4 சக்கர வாகன செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;4 சக்கர வாகன செய்திகள்

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit - technwheelz.com

Most Read Articles
English summary
Bajaj CS400 Bike was seen testing on Indian roads under Heavy Camouflage (heavy white camo paintjob). The Spy Pictures of this Bike was released recently. Bajaj CS400 is expected to launch later this year. Bajaj CS400 Bike is touted to be genuine Competitor for Royal Enfield Motorcycles. To know more about this Bajaj CS400 Bike, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X