பஜாஜ் சிடி 100பி : இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான பயணிகள் பைக் அறிமுகம்

Written By:

பஜாஜ் சிடி 100பி பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்திய அளவில் மிகவும் மலிவு விலையிலான பயணிகள் பைக்கான பஜாஜ் சிடி 100பி-ஐ, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சத்தமில்லாமல் சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இது வரை Bajaj CT 100B பைக் மாடல் பெயரில் உள்ள 'B' எதை குறிக்கிறது என்று என்பதை பற்றி எந்த விதமான தெளிவான தகவல்களும் இல்லை.

பஜாஜ் சிடி 100பி பைக்-கானது, வழக்கமான பஜாஜ் சிடி 100 மாடலில் உள்ள அதே 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 8.08 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 8.04 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. பஜாஜ் சிடி 100பி பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

bajaj-ct-100-bike-launch-at-the-price-31888-rupees

இந்த புதிய பஜாஜ் சிடி 100பி பைக், ஒரு லிட்டருக்கு 89.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டிசைனை பொருத்த வரை, சிலை கைவிடபட்ட அம்சங்களை தவிர இந்த சிடி 100பி பைக், வழக்கமான பஜாஜ் சிடி 100 மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. பிகினி டைப் ஃபேரிங்-கிற்கு பதிலாக புதிய ரவுண்ட் ஹெட்லைட் வழங்கபட்டுள்ளது.

மேலும், முன்னதாக உபயோக்கிபட்டு வந்த அலுமினியம் கிராப் ரயில் உபகரணத்திற்கு பதிலாக, புதிய பஜாஜ் சிடி 100பி பைக்-கில் ஸ்டீல் கிராப் ரயில் மற்றும் லக்கேஜ் ரேக் சேர்கபட்டுள்ளது.

பஜாஜ் சிடி 100 மற்றும் பஜாஜ் சிடி 100பி பைக் ஆகிய இரண்டு பைக்களுமே அதே வண்ணங்களின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. இஞ்ஜின் அதே சில்வர் நிறத்திலும், எக்ஹாஸ்ட் பைப் பிளாக் நிறத்திலும் வழங்கபடுகிறது. இரண்டு பைக்களிளுமே, பெட்ரோல் டேங்க் மீது ஒரு புதிய நீண்ட சீட் மற்றும் ஸ்டிக்கர் ஸ்டாண்டர்ட் அம்சமாக விளங்க உள்ளது.

bajaj-ct-100-bike-launch-for-price-31888-rupees

பஜாஜ் சிடி 100பி பைக்-கின் மிக முக்கியமான அம்சமே அதன் விலையாக தான் உள்ளது. பஜாஜ் சிடி 100பி பைக், 31,888 என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) ஈர்க்கும் விலையில் வழங்கபடுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், ஃபிப்ரவரி 1, 2016 தேதி அன்று, பஜாஜ் நிறுவனம் தங்களில் புதிய எக்ஸிக்யூடிவ் கம்யூட்டர் மோட்டார்சைக்கிளை காட்சிபடுத்த உள்ளது. பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் என்று பெயரிடபட்டுள்ள இது, இந்தியாவின் முதல் விமானதாங்கி போர்கப்பலின் மீதங்கள் கொண்டு தயாரிக்கபட்டுள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ ஒன்றை பஜாஜ் நிறுவனம் தங்களின் அங்கிகரிக்கபட்ட யூட்யூப் பக்கத்திலும் வெளியிட்டது.

English summary
Bajaj Auto has launched their all-new affordable commuter bike in India named as the Bajaj CT 100B very silently. It is not clear as to what is that 'B' in CT 100B motorcycle model's name. Bajaj claims that, this Bajaj CT 100B would have a fuel economy of 89.5 km/l. In design aspects, the CT 100B will be very much identical to the regular CT 100.
Story first published: Saturday, January 30, 2016, 20:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark