பஜாஜ் சிடி100பி பைக்கை பேடிஎம் மூலம் வாங்கினால், ரூ.5,000 கேஷ்பேக் சலுகை

Written By:

பஜாஜ் சிடி100பி பைக்கை, பேடிஎம் இணைய வர்த்தக நிறுவனம் மூலம் வாங்கினால், 5,000 ரூபாய் குறைவான விலையில் கிடைக்கிறது.

எப்படி இந்த சலுகைகளை பெறலாம் என்பது குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

பேடிஎம் தள்ளுபடி விவரங்கள்;

பேடிஎம் தள்ளுபடி விவரங்கள்;

முன்னோடி இணைய வழி வர்த்தக நிறுவனங்களில், பேடிஎம் இணைய வர்த்தக நிறுவனமும் ஒன்றாக உள்ளது.

கேஷ்பேக் ஆஃபர் மூலம், இந்த 5,000 ரூபாய் சலுகை கிடைக்கிறது. பேடிஎம் வழங்கும் இந்த சலுகையை பெற BIKE5000 என்ற ப்ரமோ கோட்-டை அந்த நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்த பஜாஜ் சிடி100பி பைக்கின் விலை, 32,668 ரூபாய் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் சிடி100பி பைக், 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் மோட்டார்சைக்கிள் ஆகும்.

97.2 சிசி கொள்ளளவு கொண்ட இதன் இஞ்ஜின், 7,500 ஆர்பிஎம்களில் 8.2 பிஹெச்பியையும், 4,500 ஆர்பிஎம்களில் 8.05 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் சிடி100பி பைக், கிக் ஸ்டார்ட் தேர்வை மட்டுமே கொண்டுள்ளது. பஜாஜ் சிடி100பி பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

பஜாஜ் சிடி100பி பைக், ஒரு லிட்டருக்கு 89.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

பஜாஜ் சிடி100பி பைக், அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 90 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

டேங்க்;

டேங்க்;

பஜாஜ் சிடி100பி பைக், 10.5 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்டுள்ளது. இது 2.4 லிட்டர் அளவிலான ரிசர்வ் கொள்ளளவு கொண்டுள்ளது.

பிரேக், வீல்;

பிரேக், வீல்;

பஜாஜ் சிடி100பி பைக், முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் டிரம் பிரேக்குகள் கொண்டுள்ளது.

பஜாஜ் சிடி100பி பைக், அல்லாய் மூலம் செய்யபட்ட வீல்கள் கொண்டுள்ளது. இது தாழ்ந்த கிரேடில் ஃப்ரேம்கள் உடைய ட்யூபுலார் சிங்கிள் டவுன் ட்யூப் சேஸி உடையதாக உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

பஜாஜ் சிடி100பி பைக், புளூ மற்றும் ரெட் டீகேல்கள் கொண்ட எபோனி பிளாக், எலக்ட்ரான் புளூ மற்றும் ஃபிளேம் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இந்த பைக், பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பாஸ் ஸ்விட்ச் மற்றும் எளிமையான ஆனலாக்மீட்டகொண்டுள்ளது. எருபொருள் இண்டிகேஷனுக்கு கேஜ்கள் எதுவும் இல்லை. அத்துடன், இதில் டேகோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர் ஆகிய வசதிகள் இல்லை.

சீட்கள்;

சீட்கள்;

பஜாஜ் சிடி100பி பைக், மிகவும் நீண்டதாக உள்ளது என் பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ரைடர் மற்றும் பில்லியன் (பின் இருக்கையில் உட்காருபவர்) சவுகர்யமாக அமர்ந்து செல்ல முடியும்.

குறிக்கோள்;

குறிக்கோள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், எக்சிக்யூட்டிவ் மோட்டார்சைக்கிள் செக்மண்டில் தங்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தி கொள்ள குறிக்கோள் கொண்டுள்ளது.

இதன் ஒரு முயற்சியாக, பஜாஜ் சிடி100பி பைக் அறிமுகம் செய்யபடுகிறது.

ஆஃபர் குறித்து;

ஆஃபர் குறித்து;

பேடிஎம் நிறுவனம் மூலம் வழங்கபடும் இந்த சலுகையானது தற்போது மும்பையில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு முறை இந்த இணையதளத்தில் பதிவு, பைக்குகள் 21 நாட்கள் கழித்து தான் வாடிக்கையாளர்களிடம் சென்றடையும்.

குறிப்பு;

குறிப்பு;

பைக்கை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள், டாகுமெண்டேஷன் மற்றும் பணம் செலுத்தும் நடைவடிக்கைகளை முடித்த நாளில் இருந்து தான், டெலிவரிக்கான இந்த 21 கணக்கு துவங்குகிறது.

வெரும் பேடிஎம் தளத்தில் புக்கிங் செய்வது மட்டும் போதாது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ரத்து செய்யமுடியாது;

ரத்து செய்யமுடியாது;

மேலும், ஒரு முறை டாகுமெண்டேஷன் நடவடிக்கை முடிவடைந்த பின், பைக்கிறகான ஆர்டரை ரத்து செய்யமுடியாது. பேடிஎம் மூலம் வாங்கபடும் இந்த பைக்கிற்கு ரிட்டர்ன் பாலிஸி (திருப்பி அனுப்பு) வாய்ப்பு இல்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் சிடி 100பி : இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான பயணிகள் பைக் அறிமுகம்

மீண்டும் விற்பனைக்கு வந்தது பஜாஜ் சிடி 100 - முழு விபரம்!

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
One of the leading e-commerce online shopping and bill payment website - Paytm, is offering the Bajaj CT100B for Rs. 27,668 after cashback. To avail Rs. 5,000 cashback, Promo Code BIKE5000 is to be used. On doing so, Customers get this cashback, from the actual price of Rs. 32,668. There is no cancellation and there is no return policy on this product.
Story first published: Tuesday, March 1, 2016, 16:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more