பிப்ரவரியில் புதிய பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

By Ravichandran

பிப்ரவரியில் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்திய வாகன சந்தையில் புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய பைக், இந்தியாவின் எக்ஸிக்யூடிவ் செக்மண்ட்டை குறி வைத்து அறிமுகம் செய்யபடுகிறது. இந்த புதிய பைக்கிற்கு சூட்டபட்டுள்ள 'மாடல் எக்ஸ்' என்ற கோட் நேம் (புனை பெயர்) சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் வெளியிடபட்டது.

துரதிஷ்டவசமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாடல் எக்ஸ் பைக் இந்திய சந்தைகளில் ஃபிப்ரவரி 1-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆட்டோமொபைல் நிறுவனம், தங்களின் புதிய பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு சில நாட்களுக்கு முன்பாக அறிமுகம் செய்கிறது.

bajaj-new-motorcycle-model-x-introduced-on-1st-february-2016

தற்போதைய நிலையில், டிஸ்கவர் ரேன்ஜ் மட்டுமே எக்ஸிக்யூடிவ் செக்மண்ட்டில் வெளியாகும் பைக்காக விளங்குகிறது. விரைவில் அறிமுகமாக உள்ள இந்த புதிய மாடல் எக்ஸ் பைக்கின் விலை, டிஸ்கவர் 150 மற்றும் பல்ஸர் 150 ஏஎஸ் மாடல்களின் விலைகளுக்கு இடையில் நிர்ணயிக்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

2016-ல், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபடும் முதல் பைக்காக, மாடல் எக்ஸ் பைக் தான் திகழ உள்ளது. இதையடுத்து, பஜாஜ் நிறுவனம் ஏராளமான பைக்களை இந்த 2016-ல் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதிக அளவிலான மைலேஜ் கொண்ட புதிய பிளாட்டினா பைக்கை உருவாக்குவதில், பஜாஜ் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. புதிய பிளாட்டினா, ஒரு லிட்டருக்கு 100 கிலோமீட்டர் என்ற மிக அதிக எரிபொருள் திறன்மிக்க பைக்கை பஜாஜ் இஞ்ஜினியர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

புதிய பிளாட்டினா, மேம்படுத்தபட்ட அம்சங்களுடனும், சற்று கூடுதல் விலையிலும் இந்த 2016-ல் அறிமுகம் செய்யபட உள்ளது.

Most Read Articles
English summary
New Motorcycle from Bajaj Auto is most likely to be launched On Feb 1. This new motorcycle would target the executive segment in India. Earlier, Bajaj Auto revealed the codename of this bike. It is named as 'Model X'. Bajaj Auto is not participating in the 2016 Delhi Auto Expo. Model X is the first motorcycle to be launched in 2016 by Bajaj.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X