பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், ஃபிப்ரவரி 1-ல் அறிமுகம்?

Written By:

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், வரும் ஃபிப்ரவரி 1-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அறிமுகம் செய்யபட உள்ள புதிய பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், எப்போது அறிமுகம் செய்யபடும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடபடவில்லை.

எனினும், இது ஃபிப்ரவரி 1, 2016 அன்று அறிமுகம் செய்யபடும் என செய்திகள் வெளியாகிறது.

முதல் 375சிசி பைக்?

முதல் 375சிசி பைக்?

பஜாஜ் நிறுவனம் சார்பாக இந்தியாவில் வழங்கப்படும் முதல் 375சிசி பைக்காக பஜாஜ் பல்சர் சிஎஸ்400 தான் விளங்க உள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் நம்பகமான மற்றும் இயக்கவும், பராமரிக்கவும் எளிமையான பைக்காக இருக்கும். இது ஓய்வு நேர பயணங்களுக்கும், நெடுந்தூர பயணங்களுக்கு சிறந்த பைக்காக விளங்கும்.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், இதன் செக்மண்ட்டில் முன்னிலை தயாரிப்பாக இருக்கும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பஜாஜ்?

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பஜாஜ்?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக, எக்ஸ்போவில்

பங்கேற்கு செலவை மிச்சபடுத்தி, அந்த நிதி ஆதாரத்தை தங்கள் தயாரிப்புகளின் மார்கெட்டிங்-கிற்கு உபயோகிக்க திட்டமிட்டுள்ளது.

புதிய செக்மண்ட்;

புதிய செக்மண்ட்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கின் அறிமுகத்தின் மூலம், இந்திய வாகன சந்தையில் பவர் குரூஸர் என்ற புதிய ரகத்தையே உருவாக்க, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கின் பல்வேறு விதமான பிரபாவங்களை கொண்டுள்ளது. இதன் ஹெட்லேம்ப் மற்றும் ஃப்ரண்ட் ஃபேரிங், நீளமான பெட்ரோல் டேங்க், பல்சர் 200 என்எஸ் பைக்கின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், டுகாட்டியின் டயவெல் பைக்கை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இப்படியாக, இதன் தோற்றம் மிக அம்சமாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், 375சிசி, லிக்விட்-கூல்ட், கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் உள்ளது போன்றே சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

பவர் குரூஸர் வாகனத்திற்கு ஏற்ற வகையில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் இஞ்ஜின் 33 பிஎஸ் மற்றும் உச்சபட்சமாக 35 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் வகையிலான திறன் கொண்டுள்ளது. இதன் மோட்டார், 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

கேடிஎம் 390 ட்யூக் பைக் வடிவமைக்கபட்டுள்ள அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு தான் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் உருவாக்கபட்டுள்ளது.

இதனால், கேடிஎம் 390 ட்யூக் பைக் மற்றும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கிற்கும் ஒரே வகையிலான சேஸியே பயன்படுத்தபடுகிறது.

ஆனால், இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கிற்கு பவர் குரூஸர் தோற்றம் கொடுப்பதற்காக, முன் முனை குறுக்கபட்டு, நீண்ட ரியர் ஸ்விங் ஆர்ம் வழங்கபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன் பொருத்த வரை, இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கிற்கு, பல்சர் 200 என்எஸ் பைக்கின் ரியர் கேஸ் சார்ஜ்ட் மோனோஷாக் சஸ்பென்ஷனும், கேடிஎம் 390 ட்யூக் ரேஞ்ச்-ன் ப்ரண்ட் அப்சைட் டவுன் போர்க்குகள் பொருத்தபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கின் ஃப்ரண்ட் மற்றும் ரியரில், டிஸ்க் பிரேக்-கள் வழங்கபட்டுள்ளது. மேலும், ஏபிஎஸ் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கபடுகிறது.

போட்டி?

போட்டி?

இந்திய வாகன சந்தைகளில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கிற்கு நேரடி போட்டி போல் எந்த விதமான வாகனங்களும் இல்லை.

செயல்திறன் ஒற்றுமையின் அடிப்படையில், ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மட்டுமே இதற்கு இணையான வாகனமாக விளங்குகிறது.

விலை;

விலை;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கின் மிக முக்கியமான சிறப்பு அம்சங்களில், இதன் விலையும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது.

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016ல் விற்பனைக்கு வருகிறது பல்சர் சிஎஸ்400: விபரங்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Bajaj Pulsar CS400 is expected to be launched on February 1st, 2016. This is the Bajaj’s first ever 375cc motorcycle in India. This is launched with the idea to provide an easy to run and maintain motorcycle. This can also used for leisure biking and long rides. This Bajaj Pulsar CS400 is expected to be priced below Rs 2 lakh.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark