பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கிற்கு கவர்ச்சிகரமான மாதத் தவணை திட்டம்

Written By:

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக், இப்போது ஈர்க்கும் வகையிலான மாதத் தவணைத் திட்டத்தில் வழங்கபடுகிறது.

புதிய ஸ்கீம்களுடன் வழங்கபடும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் பற்றி...

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் பற்றி...

பஜாஜ் ஆட்டோ, தங்கள் நிறுவனம் சார்பாக, முதன் முறையாக முழுவதும் ஃபேரிங் செய்யபட்ட வாகனமான பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கை, 2015-ல் அறிமுகம் செய்தனர்.

இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டதில் இருந்து, நல்ல அளவில் விற்பனையை குவித்து வருகிறது. இந்த பைக், மக்களை ஈர்க்கும் அல்லது வெருக்க வைக்கும் வகையிலான நிஜமான பல்சர் ஆட்டிட்யூட் கொண்டுள்ளது.

விற்பனையை கூட்டும் முயற்சி;

விற்பனையை கூட்டும் முயற்சி;

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் விற்பனையை மேலும் கூட்டும் வகையில், பஜாஜ் நிறுவனம் ஒரு தவிர்க்கமுடியாத சலுகைகயை வழங்கி வருகிறது.

இனி இந்த பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கை 3,499 ரூபாய் என்ற இஎம்ஐ ஸ்கீம்களில் பெறலாம். இந்த ஃபைனான்ஸ் தேர்வுகளை, ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் அல்லாத இரு வெர்ஷன்களில் (மாடல்கள்) மீதும், அனைத்து பஜாஜ் டீலர்ஷிப்களிலும் பெற்று கொள்ளலாம்.

இஎம்ஐ ஸ்கீம் குறித்த விவரங்கள்;

இஎம்ஐ ஸ்கீம் குறித்த விவரங்கள்;

மாதத்திற்கு 3,499 ரூபாய் என்ற இஎம்ஐ ஸ்கீம்களில் வழங்கபடும் இந்த பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்-கிற்கு 48 மாதங்கள் இஎம்ஐ செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் தரப்பில் இருந்து, 33,224 ரூபாய் என்ற டவுன் - பேமண்ட் செலுத்த வேண்டும்.

முழுமையாக ஃபேரிங் செய்யபட்ட இந்த பைக், 1.40 என்ற ஆன் - ரோட் (மஹாராஷ்டிரா) விலை ரூபாயாக உள்ளது.

எக்ஸ்சேன்ஜ் ஸ்கீம்களும் உண்டு;

எக்ஸ்சேன்ஜ் ஸ்கீம்களும் உண்டு;

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, எக்ஸ்சேன்ஜ் ஸ்கீம்களும் வழங்கபடுகிறது.

எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது, பழைய பைக் மீது கிடைக்கும் பணம், இந்த பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கிற்கான டவுன் - பேமண்ட் கட்டணமாக வாடிக்கையாளர்கள் மாற்றி கொள்ளலாம்.

மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து சலுகைகளும், அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கட்டாயமாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

தற்போதைய நிலையில், பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் யெல்லோ (மஞ்சள்), ரெட் மற்றும் டெமான் பிளாக் பெயிண்ட் வேலைப்பாடுகளுடன் கிடைக்கிறது.

மெல்ல மெல்ல தங்களின் மோட்டார்சைக்கிளின் ரேன்ஜ்களை புதிய நிறங்களிலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது.

2016-ஆம் ஆண்டில், இந்த பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக், மேலும் பல்வேறு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கருப்பு வண்ணத்தில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200...

தோற்றத்தில் மிரட்டல், விலையில் அசத்தல்... வந்துவிட்டது புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200

விரைவில் வருகிறது புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்: டீசர் வெளியீடு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Bajaj Pulsar RS200 Bikes are now offered with an EMI scheme of Rs.3499. Bajaj Auto introduced their first and fully-faired motorcycle in the Indian market during the year 2015. This Bajaj Pulsar RS200 Bike has typical Pulsar attitude. The EMI scheme of Rs. 3,499 is applied for a tenure of 48 months period.
Story first published: Wednesday, January 20, 2016, 9:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark