பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் உற்பத்தி நிலை ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் உற்பத்தி நிலை ஸ்பை படங்கள் வெளியாகியது. இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்வேறு வகையிலான மக்களை ஈர்க்கும் வகையிலான தயாரிப்புகள் வழங்குவதால், மிகவும் புகழ் பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக், இந்திய வாகன சந்தைகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2 வீலர்களில் ஒன்றாக உள்ளது.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக், உற்பத்திக்கு தயார் நிலையிலான மாடல்கள் ஏறக்குறைய தயாராகிவிட்டது என்றே கூறலாம்.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக், கான்செப்ட் வடிவில் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் என்று அழைக்கப்பட்டது.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் சோதனைகள் எந்த விதமான உரு மறைப்பும் இல்லாமல், லடாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள், தற்போது இனையதளங்களில் வெளியாகியுள்ளது.

உருமறைப்பு செய்யப்படாமல் சோதனைகள் மேற்கொள்ளப்படும் வெளியாகிய சபை படங்களில் இருந்து உற்பத்தி நிலை மாடல் எப்படி இருக்கும் என பஜாஜ் பைக் ஆர்வலர்கள் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும்.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக், வரும் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

விலை;

விலை;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக், மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றம்;

தோற்றம்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கை, தற்போதைய ஸ்பை படங்களை பார்த்த உடனேயே, இதன் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

ஏபிஎஸ் செட்டப் ஆனது முன் சக்கரத்தில் மட்டுமே காணப்படுகிறது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அல்லது டியூவல் சேனல் ஏபிஎஸ் உபயோகிக்கப்படுகிறதா என்பது குறைத்து தெளிவுத்தன்மை இல்லை.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் ஹெட்லைட் மற்றும் டெயில்லேம்ப்களை காண முடியவில்லை. எனினும், இவை கான்செப்ட் வடிவில் காணப்பட்டது போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கிற்கு, கான்செப்ட் வடிவில் காணப்பட்டது போன்றே அல்லாய் வீல்களே பொருத்தப்படும். இது நிச்சயம் குளுமையான விஷயமாக இருக்கும்.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் உற்பத்தி மாடலுக்கும், கான்செப்ட் வடிவிலான மாடலுக்கும் இடையில் உள்ள சில மாற்றங்கள், இந்த ஸ்பை படங்களில் தெளிவாக தெரிகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தலைகீழாக பொருத்தப்பட்டிருந்த ஃபோர்க்குகளை மாற்றி, வழக்கமான பாரம்பரியம் மிக்க ஃபோர்க்குகளையே பொருத்தியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கேடிஎம் நிறுவனத்தின் 390 டியூக் மற்றும் பஜாஜ் ஆட்டோவின் விஎஸ்400 பைக்கிற்கும் ஒரே இஞ்ஜின் தான் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

எனினும், பஜாஜ் ஆட்டோவின் விஎஸ்400 பைக்கிற்கான சிங்கிள் சிலிண்டர் உடைய 373.2 சிசி, லிக்விட்-கூல்ட், ஃப்யூவல்-இன்ஜெக்டட் இஞ்ஜினுக்கு சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

சிறப்பு தொழிநுட்பம்;

சிறப்பு தொழிநுட்பம்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் இஞ்ஜினுக்கு, பேடன்ட் செய்யப்பட்ட ட்ரிபிள் ஸ்பார்க் தொழில்நுட்பம் சேர்க்கபட்டுள்ளது.

இது, இந்த பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் எரிபொருள் திறனை வெகுவாக அதிகரிக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் விவரக்குறிப்புகள் கசிந்தது

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியது

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; https://www.facebook.com/binny.jacob.14/posts/10153984350337123?pnref=story

English summary
Bajaj Pulsar VS400 Production Model was Spied while Testing without Camouflage. These Spy Pics which were captured during its Testing in Ladakh was released recently. KTM and Bajaj Auto are likely to share the engine between 390 Duke and VS400 models. This engine will feature Bajaj's patented triple spark technology for better Mileage. To know more, check here...
Story first published: Wednesday, August 24, 2016, 13:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark