பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி அதிகரிக்கபடுகிறது

By Ravichandran

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், வேகமாக பிரபலமாகி வருவதை அடுத்து, அதன் உற்பத்தி கூட்டபட்டு வருகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சமீபத்தில் தான், வி15 என பெயரிடபட்டுள்ள எக்சிக்யூட்டிவ் கம்யூட்டர் மோட்டார்சைக்கிளை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்தனர். இதன் டெலிவரி, தியாகிகள் தினமான மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்கியது.

இதனை சிறப்பிக்கும் விதமாக, இந்திய கடற்படை அதிகாரிகள் கொண்ட ஒரு மோட்டார்சைக்கிள் பயணம், மஹாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜியின் கட்டுபாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கு மேற்கொள்ளபட்டது.

இது வரை, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த வி15 மோட்டார்சைக்கிளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் மட்டும், 2,500-க்கும் கூடுதலான வி15 மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்தது. இதற்கு தொடர்ந்து வரவேற்பு கூடி வருவதையடுத்து இதன் உற்பத்தியை அதிகரிக்க பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போதைய நிலையில், வி15 மோட்டார்சைக்கிள், பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமாக, பந்த்நகர் மற்றும் வாலுஜ் ஆகிய பகுதிகளில் உள்ள உற்பத்தி ஆலைகளில் உற்பத்ஹ்டி செய்யபட்டு வருகிறது.

புதிதாக அறிமுகம் செய்யபட்ட எந்த ஒரு வாகனத்திற்கு அதன் முதல் சில மாதங்களின் உற்பத்தி நடவடிக்கை மிகவும் கடினமாக இருக்கும். இனி வரும் நாட்களில், ஒரு மாதத்திற்கு சுமார் 1,000 வி15 மோட்டார்சைக்கிள் தயாரிக்கபடலாம் என பஜாஜ் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

bajaj-v-15-motorcycle-production-increased-on-rising-demand

முன்னதாக, டெல்லி அரசு, வி15 மோட்டார்சைக்கிள் உட்பட வேறு சில வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்துருந்தது. இந்த வாகனங்கள் பிஎஸ்-4 மாசு நெறிகளுக்கு உட்பட்டு இருக்கவில்லை. தற்போது, வி15 மோட்டார்சைக்கிளை டெல்லியில் விற்பதற்கு பச்சை கொடி காட்டபட்டுவிட்டது.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 61,000 என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கபட்டு வருகிறது. தற்போது, இந்த வி15 மோட்டார்சைக்கிள், பியர்ல் வைட் மற்றும் எபோனி பிளாக் ஆகிய 2 நிறங்களில் மட்டுமே விற்பனை செய்யபட்டு வருகிறது.

உற்பத்தி அதிகரிக்கபடுவதையடுத்து, இனி வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவு செய்யும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள்களை இன்னும் விரைவாக டெலிவரி பெற்று கொள்ளலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் ரூபத்தில் புதிய வடிவம் பெற்ற ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் டெலிவரி, தியாகிகள் தினத்தில் துவக்கம்

இந்திய கடற்படை அதிகாரிகள், பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள் மூலம் பயணம்

Most Read Articles
English summary
Bajaj Auto recently launched their V-15 executive commuter motorcycle in Indian market. Deliveries of this motorcycle commenced from March 23th. Bajaj V-15 motorcycle is garnering good response from its customers. In order to cater its increasing popularity and demand, Bajaj Auto has planned to increase the production of V-15 motorcycles. To know more, check here...
Story first published: Thursday, March 31, 2016, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X