பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் அறிமுகம்: முழுமையானத் தகவல்கள்

Written By:

கஃபே ரேஸர் மற்றும் சாதாரண பைக்கின் கலவையான டிசைன் அம்சங்களுடன் கூடிய புதிய பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் இன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள, புதிய பஜாஜ் வி குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்!

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்!

பஜாஜ் வி பைக், இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பலின் மீதங்களில் இருந்து தயாரிக்கபட்டுள்ளது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூறியுள்ளது.

விமான தாங்கி போர் கப்பலாக விளங்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்-திற்கு மரியாதை செல்லுத்தும் விதமாகவே, இதன் மீதங்கள் கொண்டு, இந்த வி பைக் தயாரிக்கபடுவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் தான் இந்தியாவிலேயே உருவாக்கபட்ட முழு முதல் போர்விமானம் தாங்கி கப்பல் என்பது குறிப்பிடதக்கது.

அதிகாரப்பூர்வ வீடியோ;

அதிகாரப்பூர்வ வீடியோ;

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால், அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பைக் குறித்த வீடியோ, சில தினங்களுக்கு முன் பஜாஜ் ஆட்டோவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் வெளியிடபட்டு டீஸ் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி பைக், 150சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. ஆகிரோஷமான இந்த பைக், 3000 ஆர்பிஎம்-களில் 12 என் எம் டார்க்கை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

இதன் உச்சபட்ச திறனான 13 பிஹெச்பி-யை 7,500 ஆர்பிஎம்-களில் எட்டும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன் பொருத்த வரை, இந்த புதிய வி பைக்-கின் முன் பகுதிக்கு டெலஸ்கோப்பிக் ஃப்ரண்ட் ஃபோர்க்-கள், மற்றும் பின் பகுதிக்கு ட்வின் நைட்ராக்ஸ் ஷாக்ஸ் வழங்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

புதிய பஜாஜ் வி பைக்-கின் முன் சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக்-கும், பின் சக்கரத்திற்கு டிரம் பிரேக்-கும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கியுள்ளது.

சக்கரங்கள்;

சக்கரங்கள்;

புதிய பஜாஜ் வி பைக்-கின் முன் சக்கரம், 18-இஞ்ச் அல்லாய் ரிம்-மையும், பின் சக்கரம், 16-இஞ்ச் அல்லாய் ரிம் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் - 1;

சிறப்பு அம்சங்கள் - 1;

பஜாஜ் வி பைக் ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

(*) டால் ஸ்டான்ஸ் (உயர்ந்த ஸ்டான்ஸ்)

(*) 13-லிட்டர் எரிபொருள் நிரப்பும் வகையிலான பெரிய ஃப்யூவல் டேங்க்

(*) மாஸ்குலைன் கிராஃபிக்ஸ்

(*) பிரஷ்ட் அலுமினியம் ஹைலைட்ஸ்

(*) கேஃப் ரேசர் இன்ஸ்பையர்ட் லுக்ஸ்

சிறப்பு அம்சங்கள் - 2;

சிறப்பு அம்சங்கள் - 2;

பஜாஜ் வி பைக் ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

(*) 60 வாட்ஸ் ஹெட்லேம்ப் மற்றும் எல்ஈடி டெய்ல் லேம்ப்-கள்

(*) ட்வின் ஸ்போக் அல்லாய் வீல்கள்

(*) தண்ட்ரஸ் எக்ஹாஸ்ட்

(*) நிறம் மாறும் எல்ஈடி இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர்

சிங்கிள் சீட்டர்;

சிங்கிள் சீட்டர்;

அடிப்படையில், இந்த பஜாஜ் வி பைக், 2 பேர் அமரக்கூடிய வகையிலான பைக் ஆகும்.

ஆனால், வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால் இந்த பைக்-கின் பாடி நிறத்திலான கௌல் கொண்டு ரியர் சீட்-டை மூடி மறைத்து விட்டால், சிங்கிள் சீட்டர் போல் காட்சி அளிக்கும்.

நிறங்கள்;

நிறங்கள்;

பஜாஜ் வி பைக், எபோனி பிளாக் மற்றும் பெர்ல் வைட் ஆகிய 2 நிறங்களில் கிடைக்கிறது.

ஆரம்கட்ட உற்பத்தி;

ஆரம்கட்ட உற்பத்தி;

ஆரம்பகட்டத்தில், பஜாஜ் வி பைக் மாடலில், 20,000 பைக்-களை தயாரிக்க, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

புதிய பஜாஜ் வி பைக்-கின் உற்பத்தி, ஃபிப்ரவரி 5 முதல் துவங்க உள்ளது.

டெலிவரி;

டெலிவரி;

இந்த பஜாஜ் வி பைக்-கின் டெலிவரி, இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்க உள்ளது.

போட்டி வாகனம்?

போட்டி வாகனம்?

பஜாஜ் வி பைக் ஆனது, 125 சிசி கம்யூட்டர் செக்மெண்ட்டை குறி வைத்து அறிமுகம் செய்யபட்டுள்ளது.

பஜாஜ் வி பைக்-கிற்கு போட்டியாக, இந்த செக்மெண்ட்-டில் முன்னோடியாக விளங்கும் ஹீரோ நிறுவன பைக்-களே இருக்கும்.

விலை?

விலை?

பஜாஜ் வி பைக், 60,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய்-க்கு இடையிலான எதிர்பார்க்கபடும் விலையில் வழங்கபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் ரூபத்தில் புதிய வடிவம் பெற்ற ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
New Bajaj V Bike, which is being produced by Bajaj Auto is launched, as planned. This Bajaj V Bike is produced from metallic remains of the India's first aircraft carrier named the INS Vikrant. Production of this new bike will commence from February 5, 2016. The Bajaj V bike is available in two colours, namely Ebony Black and Pearl White.
Story first published: Monday, February 1, 2016, 15:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark