பஜாஜ் வி பைக்கின் அதிகாரப்பூர்வ படங்களின் தொகுப்பு

Written By:

இன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய பஜாஜ் வி பைக்கின் விபரங்களை எமது முந்தைய செய்தித் தொகுப்பில் படித்திருப்பீர்கள். குறைவான விலையில் வரும் 150சிசி பைக் என்பதுடன், இதன் வித்தியாசமான டிசைன் பலரையும் கவர்ந்திருக்கும். இந்த பைக்கை வாங்கும் நோக்கில், இந்த பைக்கை முழுமையாக பார்க்க விரும்புவோர்க்கு ஏதுவாக, அனைத்து கோணங்களிலும் இந்த புதிய பைக்கை காண்பதற்கான அதிகாரப்பூர்வ படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியிலும், அதற்கு கீழே கூடுதல் தகவல்களையும் காணலாம்.

புதிய பஜாஜ் வி பைக்

பின்புறத்தில் கஃபே ரேஸர் ரகத்திலும், முன்புறத்தில் சாதாரண பைக் மாடல்களை போல டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய 150சிசி பைக் மாடல் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலின் சேவையை கவுரப்பபடுத்தும் விதத்தில், இந்த பைக்கிற்கு வி என்று பெயரிட்டுள்ளது பபஜாஜ் ஆட்டோ. அத்துடன், உடைக்கப்பட்ட அந்த கப்பலின் பாகங்களிலிருந்து பெறப்பட்ட இரும்பு இந்த பைக்கின் பிரத்யேக எடிசன் மாடலின் பெட்ரோல் டேங்க் தயாரிப்பில் பயன்படுத்தப்படும்.

அதேபோன்று, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை கவுரவிக்கும் விதத்திலான, அடையாளச் சின்னமும், பெட்ரோல் டேங்க்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அறிமுக விழாவில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், பல சுவாரஸ்யத் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, எத்தனை சதவீதம் இரும்பு பெட்ரோல் டேங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ரகசியம். அது எனக்குக்கூட தெரியாது. எனவே, அதுகுறித்து செய்தியாளர்கள் வினவ வேண்டாம்.

உடைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலின் பெரும் பகுதி இரும்பை தாங்கள் வாங்கி விட்டதாகவும், எனவே, போட்டி நிறுவனங்கள் இரும்பை வாங்குவதற்கான முயற்சியில் மெனக்கெட வேண்டாம் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். இந்த பைக் பல்சர் போன்றே வாடிக்கையாளர்களிடத்தில் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் 5ந் தேதி புதிய பஜாஜ் வி பைக்கின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. வரும் மார்ச் இறுதியில் நாட்டின் அனைத்துப் பகுதியிலுள்ள டீலர்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ரூ.60,000 முதல் ரூ.70,000 விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார்.

முக்கியக் குறிப்பு: பழைய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் உடைக்கப்பட்ட நிலையில், அதே பெயரில் புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்டமைக்கப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற பெருமையை புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் பெற இருக்கிறது.

English summary
Bajaj V Bike: Photo Gallery

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X