பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் ரூபத்தில் புதிய வடிவம் பெற்ற ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல்

Written By:

பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் வீடியோவை வெளியிட்டு, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டீஸ் செய்துள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும், பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அதிகாரப்பூர்வ வீடியோ;

அதிகாரப்பூர்வ வீடியோ;

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால், அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மோட்டார்சைக்கிள் குறித்த வீடியோ, பஜாஜ் ஆட்டோவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் வெளியிடபட்டு டீஸ் செய்யபட்டது.

இந்த புதிய மோட்டார்சைக்கிள் குறித்து, இது வரை அதிக அளவில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

புனைப்பெயர்;

புனைப்பெயர்;

இந்த புதிய மோட்டார்சைக்கிள், தற்போதைக்கு ‘வி' மோட்டார்சைக்கிள் என்று பெயரிடபட்டுள்ளது.

விக்ராந்த் உடனான பினைப்பு;

விக்ராந்த் உடனான பினைப்பு;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பலின் மீதங்களில் இருந்து தயாரிக்கபட்டுள்ளதாக பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐஎன்எஸ் விக்ராந்த் தான் இந்தியாவிலேயே உருவாக்கபட்ட முழு முதல் போர்விமானம் தாங்கி கப்பல் என்பது குறிப்பிடதக்கது.

ஐஎன்எஸ் விக்ராந்த் சிறப்புகள்;

ஐஎன்எஸ் விக்ராந்த் சிறப்புகள்;

இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த், இந்தியாவால் மேற்கொள்ளபட்ட போர் நடவடிக்கைகளின் போது மிகவும் உதவிகரமாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலை, நினைவு கூறும் வகையிலும், அதற்கு உகந்த மரியாதை வழங்கும் வகையிலும் தான், அந்த போர்கப்பலின் மீதங்கள் கொண்டு இந்த வி மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ தயாரித்துள்ளது.

புதிய பெயர்?

புதிய பெயர்?

பஜாஜ் ஆட்டோவால் தயாரிக்கபடும் இந்த இரு சக்கர வாகனம், தற்போதைக்கு ‘வி' என்ற கோட் நேம் (புனைப்பெயர்) கொண்டு அழைக்கபடுகிறது.

பஜாஜ் வி மோட்டார்சைக்கிளில் உள்ள ‘வி', விக்ராந்த் கப்பலை குறிக்கும் வகையில் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, அதற்கு வேறு பெயர் வழங்கபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகத்திறகான காரணம்?

அறிமுகத்திறகான காரணம்?

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் ஆனது, பல்சர் மற்றும் டிஸ்கவர் ஆகிய இரு மாடல்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் வகையில் அறிமுகம் செய்யபடுவதாக இந்த இந்திய இரு சக்கர உற்பத்தி நிறுவனம் கூறுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி மாடல் ஆனது, 150சிசி இஞ்ஜின் கொண்டதாக இருக்கும். இது இந்தியாவின் வாகன சந்தைகளின், பிரிமியம் எக்ஸிக்யூடிவ் செக்மண்டில் அறிமுகம் செய்யபட உள்ளது.

லிமிடெட் எடிஷன்?

லிமிடெட் எடிஷன்?

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலின் மீதங்கள் கொண்டு தயாரிக்கபடும் இந்த பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், லிமிடெட் எடிஷன் மாடலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகிறது.

ரெகுலர் வெர்ஷன்?

ரெகுலர் வெர்ஷன்?

வழக்கமான பொருட்கள் கொண்டு தயாரிக்கபடும் பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் ரெகுலர் வெர்ஷனும் (வழக்கமான பதிப்பு) அறிமுகம் செய்யபட உள்ளது.

தங்களின் புதிய தயாரிப்பை வெகுஜனங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும் பொருட்டு, புதிய புதிய யுக்திகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கையாளுகிறது.

அறிமுக தேதி?

அறிமுக தேதி?

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், ஃபிப்ரவரி 1, 2016-ல் அறிமுகம் செய்யபட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் பஜாஜ்?

ஆட்டோ எக்ஸ்போவில் பஜாஜ்?

சில தினங்களில் நிகழும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பங்கேற்க போவதில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே செய்யபட உள்ளது.

விலை?

விலை?

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் விலை மற்றும் இதர தகவல்கள், இதன் அறிமுக தினத்தன்று தான் வெளியிடப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Bajaj Auto plans to introduce new motorcycle called Bajaj V Motorcycle on February 1, 2016. Bajaj V Motorcycle was teased ahead of its launch. This V motorcycle from Bajaj is claimed to be made from remains of INS Vikrant - India's very first aircraft carrier built domestically. The V motorcycle built from INS Vikrant, is supposedly a limited edition Bike.
Story first published: Wednesday, January 27, 2016, 13:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark