பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்

Written By:

பெரிதும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களின் ஒன்றான வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விலை விவரங்ககள் வெளியிடபட்டுள்ள பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் பற்றி...

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் பற்றி...

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், அதிகமாக எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் காட்சிபடுத்தபட்டது.

வி15 மோட்டார்சைக்கிளின் சிறப்புகள்;

வி15 மோட்டார்சைக்கிளின் சிறப்புகள்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-தின் மீதங்களில் இருந்து உருவாக்கபட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பல், அதன் பயன்பாடு காலம் முடிந்த உடன் உருக்கபட்டது. இதில் இருந்து எடுக்கபட்ட மீதங்கள் கொண்டு பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க் உருவாக்கபட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, ஒரு விதத்தில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலுக்கு செலுத்தும் கௌரவமாக கருதப்படுகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைனை பொருத்தவரை, பஜாஜ் நிறுவனம், தங்களின் கம்யூட்ட / கேஃப் ரேஸர் தோற்றம் கொண்ட பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளுக்கு, ரெட்ரோ / கிளாசிக் தோற்றத்தை ஏற்று கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 11.84 பிஹெச்பி-யையும், 13 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் புதிய இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் 2 நிறங்களில் மட்டுமே கிடைக்கிறது.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், பெர்ல் வைட் மற்றும் எபோனி பிளாக் ஆகிய இரு பெயிண்ட் ஸ்கீம்களில் கிடைக்கிறது.

புக்கிங்;

புக்கிங்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் புக்கிங்கள், அதன் அறிமுகத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.

சுமார் 5,000 ரூபாய், ஆரம்ப தொகையாக கொண்டு, பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் புக்கிங்கள் ஏற்கபட்டு வருகிறது. மேலும், வி15 வாகனத்துக்கான பஜாஜ் நிறுவனத்தின் மைக்ரோ இணையதளத்திலும், பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் புக்கிங்களை செய்ய முடியும்.

அறிமுகம்?

அறிமுகம்?

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், வரும் மார்ச் மாத இறுதியில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகின்றன.

விலை;

விலை;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், ரூபாய் 62,000 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலையில் விற்கபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் அறிமுகம்: முழுமையானத் தகவல்கள்

இனி ஃப்ளிப்கார்ட் மூலமும் பஜாஜ், கேடிஎம் மற்றும் கவாஸாகி மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம்

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Bajaj Auto has launched the most-awaited V15 motorcycle in Indian market. Bajaj Auto showcased this V15 motorcycle just ahead of the 2016 Delhi Auto Expo. Pre-bookings for this V15 by Bajaj Auto had commenced one month before its launch with Rs.5000 as initial amount. Bajaj V15 motorcycle is priced at Rs. 62,000 ex-showroom (Delhi) Price.
Story first published: Friday, February 26, 2016, 12:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark