பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் விவரக்குறிப்புகள் கசிந்தது

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் விவரக்குறிப்புகள் கசிந்தது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, பல்வேறு சிறப்பான வாகனங்களை தயாரித்து வருகிறது.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் அறிமுகம், பஜாஜ் ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில், இதன் பெயர், விவரக்குறிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளது.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக் தொடர்பான கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பல்சர் விஎஸ்400...

பஜாஜ் பல்சர் விஎஸ்400...

பஜாஜ் பல்சர் விஎஸ்400 என்பது தான், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 என்று அழைக்கபட்டு வந்த பைக்கிற்கு சூட்டப்பட்டுள்ள புதிய பெயர் ஆகும்.

பஜாஜ் பல்சர் விஎஸ்400 தான், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் இரு சக்கர வாகனங்களில் அதிக டிஸ்பிலேஸ்மன்ட் கொண்ட பைக்காக உள்ளது.

கசிந்த தகவல்கள்;

கசிந்த தகவல்கள்;

www.Maxabout.com என்ற இணையதளம், இந்த பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் புரோஷரை வெளியிட்டுள்ளது.

இந்த புரோஷர் மூலமாக தான், பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் பெயர், இஞ்ஜின் விவரக்குறிப்புகள், செயல்திறன் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கிற்கு, சிங்கிள் சிலிண்டர் உடைய 373.2 சிசி, லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 8,000 ஆர்பிஎம்களில் 35 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஃபோர்க்;

ஃபோர்க்;

கான்செப்ட் வடிவில் இருந்த பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கிற்கு, தலைகீழாக பொருத்தபட்ட ஃபோர்க்குகள் இருந்தன.

ஆனால், இதன் உற்பத்தி நிலை மாடலில், வழக்கமான ஹைட்ராலிக் ஃபோர்க்குகள் பொருத்தபட்டுள்ளது.

பேட்ஜ்;

பேட்ஜ்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் டெயில் பகுதியில், தனியாக தெரியும் வகையிலான 'VS400' பேட்ஜ் சேர்க்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின், முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும், டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

எடை;

எடை;

பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் எடை, 332 கிலோகிராம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

தேர்வு முறையிலான ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பின் பகுதியில் மோனோ சஸ்பென்ஷன் மற்றும் எல்இடி லைட்கள், பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் முக்கியமான அம்சங்ககளாக உள்ளன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் அறிமுக தேதி அறிவிப்பு - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்

அமீர் கான் பெற்று கொண்ட ஸ்பெஷலான பஜாஜ் வி மோட்டார்சைக்கிள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Picture Credit ; www.maxabout.com

English summary
Essential Details about Upcoming Bajaj Pulsar CS400, rather VS400 Bike are leaked. According to New Details, Bajaj Pulsar CS400 will be called as Bajaj Pulsar VS400 Bike. Maxabout has revealed crucial information, including brochure, which reveals its name, engine specification, performance figures, and other details. To know more about VS400, check here...
Story first published: Thursday, August 18, 2016, 13:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark