உயரமானவர்களுக்கு ஏற்ற டாப் 6 ஸ்கூட்டர் மாடல்கள்!

Written By:

தற்போது ஏற்பட்டிருக்கும் கடினமான போக்குவரத்து சூழலில் ஸ்கூட்டர்களே சிறந்த போக்குவரத்து சாதனமாக மாறியிருக்கிறது. ஆண், பெண் என எந்த பாகுபாடும் இல்லாமல் தற்போது ஸ்கூட்டர்களை பயன்படுத்துகின்றனர்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் உயரமானவர்கள், உயரம் குறைவானர்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற அம்சங்களை கொண்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில், உயரமான ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற இருக்கை உயரம் உள்ளிட்ட அம்சங்களில் சிறந்த ஸ்கூட்டர்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

01. ஹோண்டா ஆக்டிவா 3ஜி

01. ஹோண்டா ஆக்டிவா 3ஜி

இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டின் விற்பனையில் நம்பர்-1 பிராண்டு ஹோண்டா ஆக்டிவா. அதில், ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் உயரமானவர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர் மாடல். ஆண், பெண் என இருவரும் பயன்படுத்துவதற்கு சிறப்பானதாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் இருக்கை தரையிலிருந்து 765 மிமீ உயரம் கொண்டது. அத்துடன், 108 கிலோ எடை கொண்டிருப்பதால், உயரமான ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் பயன்படுத்தலாம். எனவே, பயன்பாட்டுக்கும், அமர்ந்து செல்வதற்கும் சிறப்பானதாக இருக்கும். இதுதவிர்த்து, மறுவிற்பனை மதிப்பு, தரமான பாகங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின், மைலேஜ் என அனைத்திலும் நிறைவை தரும்.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

எஞ்சின்: 109சிசி

பவர்: 8 பிஎச்பி

டார்க்: 8.8 என்எம்

மைலேஜ்: 59 கிமீ/லி

விலை: ரூ.58,500

02. டிவிஎஸ் ஜுபிடர்

02. டிவிஎஸ் ஜுபிடர்

ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்து, வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கும் மாடல் டிவிஎஸ் ஜுபிடர். விற்பனையிலும் கலக்கி வருகிறது. தரையிலிருந்து 765மிமீ இருக்கை உயர அமைப்புடையது. இந்த ஸ்கூட்டர் அசத்தலான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட பிரத்யேக வண்ணங்களில் கிடைப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பானதாக இருக்கிறது.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

எஞ்சின்: 109சிசி

பவர்: 7.8 பிஎச்பி

டார்க்: 8 என்எம்

மைலேஜ்: 62 கிமீ/லி

விலை: ரூ.57,800

03. மஹிந்திரா கஸ்ட்டோ

03. மஹிந்திரா கஸ்ட்டோ

மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரில் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது. மேலும், இருக்கை அமைப்பும் இருபாலருக்கும் சிறப்பானதாக இருக்கும். தரையிலிருந்து 770மிமீ இருக்கை உயரம் கொண்டது. போட்டியாளர்களை குறைவான விலையில் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

எஞ்சின்: 109சிசி

பவர்: 8 பிஎச்பி

டார்க்: 9 என்எம்

மைலேஜ்: 61 கிமீ/லி

விலை: ரூ.52,000

04. ஹீரோ மேஸ்ட்ரோ

04. ஹீரோ மேஸ்ட்ரோ

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ரீபேட்ஜ் மாடல்தான் ஹீரோ மேஸ்ட்ரோ. ஆக்டிவாவைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாகவும், சிறப்பான வண்ணக் கலவைகளில் கிடைக்கிறது. விற்பனையிலும் சிறப்பானதாக இருக்கிறது. தரையிலிருந்து 770மிமீ இருக்கை உயரம் கொண்டது.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

எஞ்சின்: 109சிசி

பவர்: 8 பிஎச்பி

டார்க்: 9 என்எம்

மைலேஜ்: 68 கிமீ/லி

விலை: ரூ.55,000

 05. வெஸ்பா 125

05. வெஸ்பா 125

இந்தியாவின் மிக ஸ்டைலான ஸ்கூட்டர் மாடல். பிரிமியம் உணர்வை தரும் வெஸ்பா ஸ்கூட்டர் பட்ஜெட் பிரச்னை இல்லாதவர்களுக்கு அருமையான சாய்ஸ். இந்த ஸ்கூட்டர் தரையிலிருந்து 770மிமீ இருக்கை உயரம் கொண்டது. டிசைன், வண்ணங்கள் சிறப்பானதாக உள்ளது.

 முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

எஞ்சின்: 125சிசி

பவர்: 10 பிஎச்பி

டார்க்: 11 என்எம்

மைலேஜ்: 55 கிமீ/லி

விலை: ரூ.87,000

 06. ஹோண்டா ஏவியேட்டர்

06. ஹோண்டா ஏவியேட்டர்

இதுவரை பார்த்த மாடல்களில் வடிவத்தில் சற்று பெரிய ஸ்கூட்டர் மாடல். மேலும், இந்த ஸ்கூட்டர் 790மிமீ இருக்கை உயரம் கொண்டது. இதன் டீலக்ஸ் மாடலில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொண்ட காம்பி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

எஞ்சின்: 109சிசி

பவர்: 8 பிஎச்பி

டார்க்: 8.7 என்எம்

மைலேஜ்: 66 கிமீ/லி

விலை: ரூ.65,500

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

மறுவிற்பனை மதிப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பானது ஹோண்டா ஆக்டிவா 3ஜி. எனவே, மற்ற ஸ்கூட்டர்களைவிட ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

 
English summary
Here is a list of best scooters for tall riders, be it for men or women.
Story first published: Monday, March 28, 2016, 9:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark