அரை டன் எடை, அதற்கு ஏற்ற விலை... இந்தியாவில் களமிறங்கிய பிக் டாக் மோட்டார்சைக்கிள்!

Written By:

விசேஷமான வடிவமைப்புடன் மோட்டார்சைக்கிள்களை தயாரிப்பதில் அமெரிக்காவை சேர்ந்த பிக் டாக் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உலக புகழ்பெற்று விளங்குகிறது. இதுவரை 30,000க்கும் மேற்பட்ட விசேஷ வடிவமைப்பு கொண்ட மோட்டார்சைக்கிள்களை உலக அளவில் விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில், பிக் டாக் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையிலும் கால் பதித்துள்ளது. தனது முதல் மோட்டார்சைக்கிள் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிள் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

 மாடல் விபரம்

மாடல் விபரம்

பிக் டாக் கே9 ரெட் சாப்பர் 111 என்ற பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. One of one என்று சொல்லக்கூடிய ஒரேயொரு மோட்டார்சைக்கிள் மட்டுமே பிரத்யேகமாக தயாரித்து கொடுக்கப்படும். இதேபோன்று, வேறு எந்த மோட்டார்சைக்கிளும் இருக்காது. தயாரிக்கப்படாது. அவ்வளவு பிரத்யேகமானது.

சட்ட அங்கீகாரம்

சட்ட அங்கீகாரம்

பொதுவாக, சாதாரண மோட்டார்சைக்கிள்களை வாங்கி, அதில் மாறுதல்களை செய்து கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது. ஆனால், அவை சட்டப்பூர்வமான அங்கீகாரத்துக்கு உட்பட்டதாக இருப்பதில்லை. இந்த நிலையில், சாலையில் இயக்க சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிளாகவும் இது தெரிவிக்கப்படுகிறது.

தனித்துவ டிசைன்

தனித்துவ டிசைன்

சாப்பர் எனப்படும் விசேஷமான வடிவமைப்பு கொண்ட கஸ்டமைஸ் மாடலாக வந்திருக்கிறது பிக் டாக் கே9 ரெட் சாப்பர் மோட்டார்சைக்கிள். மிக நீண்ட ஃபோர்க்குகள் கொண்டதாகவும், உயரமான இடத்தில் கைப்பிடிகள் அமைப்பு உடையதாகவும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

 கூடுதல் ஆக்சஸெரீகள்

கூடுதல் ஆக்சஸெரீகள்

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் இந்த மோட்டார்சைக்கிளுக்கு வழங்கப்படுகிறது. இருக்கை, ஹேண்டில்பார், பேக்குகள், சக்கரங்கள் என இந்த பட்டியல் நீள்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு மட்டும் என்றில்லை, புதிதாக ஆர்டர் செய்தால் வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவமைப்புடன், சிறப்பம்சங்களுடன் தயாரித்து கொடுக்கிறது பிக் டாக் நிறுவனம்.

 எஞ்சின்

எஞ்சின்

பிக் டாக் கே9 ரெட் சாப்பர் மோட்டார்சைக்கிளில் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 1,807சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. எஸ் அண்ட் எஸ் சூப்பர்ஸ்லைடர் நிறுவனத்திடமிருந்து இந்த எஞ்சின் பெற்று பொருத்தப்படுகிறது.

 எடை

எடை

இந்த மோட்டார்சைக்கிள் 10 அடி நீளமும், 475 கிலோ எடையும் கொண்டது. சாப்பர் ரக மோட்டார்சைக்கிளாக காட்டுவதற்காக முன்புறத்தில் மிக நீளமான 41 மிமீ ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கை அமைப்பு தரையிலிருந்து 244மிமீ உயரம் கொண்டது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

இரண்டு சக்கரங்களிலும் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் எம்எச்-90-21 56வி டயர்களும், பின்புறத்தில் மிக பிரம்மாண்டமான 250/40 விஆர்18 டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை கோப்ரா நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகின்றன.

 விலை

விலை

ரூ.59 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை இந்தியாவின் காஸ்ட்லியான மோட்டார்சைக்கிள் மாடலாக கருத முடியும். வாடிக்கையாளர்களிடத்தில் இருந்து பெரிய அளவிலான வரவேற்பை எதிர்பார்ப்பதாகவும், ஒவ்வொரு மோட்டார்சைக்கிளும் தனித்துவத்துடன் தயாரித்து தர ஆவலாக இருப்பதாக பிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Big Dog Motorcycle, a custom bike builder has launched the K9 Red Chopper in India for Rs 59 lakh ex-showroom (Delhi).
Story first published: Tuesday, November 29, 2016, 11:22 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos