ஓசூர் டிவிஎஸ் ஆலையில் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் உற்பத்தி துவங்கியது!

Written By:

ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் இருசக்கர வாகன ஆலையில், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டிருக்கிறது.

டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியின் முதல் பைக் மாடலாக வரும் இந்த பைக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், கேடிஎம் பிராண்டுக்கு நேர் போட்டியாக கருதப்படுவதால், வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முக்கியமான மாடல்

முக்கியமான மாடல்

உயர் வகை கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கும், தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் மிக முக்கியமான மாடல் இந்த பிஎம்டபிள்யூ ஜி310ஆர். அதாவது, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 200சிசி திறனுக்கும் மேலான முதல் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாகவும், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் 500சிசி திறனுக்கும் குறைவாக தயாரிக்கும் முதல் மாடலாகவும் இது வெளிவருகிறது. எனவே, இரு நிறுவனங்களுக்கும் மிக முக்கிய மாடல்.

 ஏற்றுமதி

ஏற்றுமதி

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதனால், வர்த்தக ரீதியில் டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணிக்கு அதிக பங்களிப்பை தரும் மாடலாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் இருக்கும் ஒற்றை சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் அமைப்பு, 17 இன்ச் அலாய் வீல்கள், மெட்ஸீலர் டயர்கள், எல்இடி இண்டிகேட்டர் லைட்டுகள், முழுவதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களில் சில.

 அறிமுகம்

அறிமுகம்

வரும் அக்டோபர் மாதத்தில் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணி திட்டமிட்டு இருக்கிறது. ரூ.1.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி

போட்டி

கேடிஎம் டியூக் 390, மஹிந்திரா மோஜோ, ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஆகிய மாடல்களுடன் இந்த புதிய மோட்டார்சைக்கிள் போட்டிபோடும்.

 
English summary
BMW G310R Production Begins At The TVS Plant In India.
Story first published: Friday, July 8, 2016, 15:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark