பிஎம்டபுள்யூ மோட்டோராட், டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கும் புதிய மோட்டார்சைக்கிள்

Written By:

பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து புதிய அட்வென்ச்சர் / டூரிங் மோட்டார்சைக்கிளை ரகசியமாக உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகிறது.

பிஎம்டபுள்யூ மோட்டோராட் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஜி 310 ஆர் என்ற மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இந்நிலையில், இந்த 2 நிறுவனங்கள் ரகசியமாக உருவாக்கி வரும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை, இனி தெரிந்து கொள்ளலாம்.

ஜிஎஸ்310...

ஜிஎஸ்310...

பிஎம்டபுள்யூ மோட்டோராட் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் தயாரிக்கும் இந்த மோட்டார்சைக்கிளுக்கு, ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிள் என பெயர் சூட்டபட்டுள்ளது. இது ஒரு நுழைவு நிலை டூ வீலராக இருக்கும்.

மற்றொரு மோட்டார்சைக்கிளான ஜி 310 ஆர், நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார்சைக்கிள் ஆகும். ஆனால், ஜிஎஸ்310 மாடலானது, அட்வென்ச்சர் / டூரிங் மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிள், ஜி 310 ஆர் பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

பிஎம்டபுள்யூ மோட்டோராட் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கி வரும் இந்த ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிள், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என செய்திகள் வெளியாகிறது.

செலவுகளை குறைக்க முயற்சி;

செலவுகளை குறைக்க முயற்சி;

பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம், இந்த ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிளுக்கான பல்வேறு டிசைன் அம்சங்களை, தங்களின் பிற அட்வென்ச்சர் / டூரிங் மோட்டார்சைக்கிள்களில் ஏற்றுக்கொள்ள உள்ளது.

மேலும், உருவாக்கம் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட செலவுகளை குறைக்கும் நோக்கில், ஜி 310 ஆர் மோட்டார்சைக்கிளின் பல்வேறு அம்சங்களை, இந்த ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிளிலும் ஏற்றுக்கோள்ள முடிவு செய்தள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஜி 310 ஆர் மோட்டார்சைக்கிளின் உள்ள இஞ்ஜினே தான், இந்த ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிளிலும் பொருத்தப்பட உள்ளது. எனினும், பிஎம்டபுள்யூ மோட்டோராட் இஞ்ஜினியர்கள், இந்த அட்வென்ச்சர் / டூரிங் மோட்டார்சைக்கிளுக்கு ஏற்றவாறு, இந்த இஞ்ஜினின் திறனை மாற்றி அமைக்க உள்ளனர்.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

மேம்பட்ட ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில், ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிளின் சஸ்பென்ஷன், எக்ஹாஸ்ட் சிஸ்டம், பாடிஒர்க் மற்றும் எர்கானாமிக்ஸ் மறுவடிவமைக்கப்படும்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஜி 310 ஆர் மோட்டார்சைக்கிளை போல், ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிளும், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும். சமீப காலமாக, இந்திய வாடிக்கையாளர்கள் இடையே, அட்வென்ச்சர் / டூரிங் மோட்டார்சைக்கிள்கள் மீதான ஆர்வம் வேகமாக அதிகரித்து வருகிறது.

விலை;

விலை;

விலை பொருத்த வரை, ஜி 310 ஆர் மோட்டார்சைக்கிளை காட்டிலும், ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிள் சற்று பிரிமியம் விலை கொண்டதாக இருக்கும்.

இந்த ஜிஎஸ்310 மோட்டார்சைக்கிள், சுமார் 2.5 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் ஆக்சஸரீஸ் விவரங்கள் வெளியீடு - முழு விவரம்

ஓசூர் டிவிஎஸ் ஆலையில் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் உற்பத்தி துவங்கியது!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் சூப்பர்சார்ஜ்ட் ஆர்5 ஹோமேஜ் கான்செப்ட் அறிமுகம்

குறிப்பு; இந்த செய்தியில் உபயோகிக்கப்பட்ட படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

English summary
BMW Motorrad and TVS Motors are developing an all-new adventure/ touring model Motorcycle secretly. Reports suggest that, apart from G310 motorcycle, an entry level model named as GS310 is also being developed. TVS Motors and BMW Motorrad will be jointly developing this GS310 in India. This adventure/ touring model based on G310 platform. To know more, check here...
Story first published: Saturday, September 3, 2016, 14:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark