பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Written By:

பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டது. எவ்வளவு தான் மக்கள் மைலேஜ் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் மாசு உமிழ்வு குறைவான மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து வந்தாலும், குரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு தனிப்பட்ட அபிமானிகள் உள்ளனர்.

பிஎம்டபுள்யூ மோட்டோராட்டின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய கே1600பி குரூஸர்...

புதிய கே1600பி குரூஸர்...

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் தயாரிக்கும் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள், 2015-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் 101 மோட்டார்சைக்கிளின் பிரபாவம் கொண்டுள்ளது. இந்த பிஎம்டபுள்யூ மோட்டோராட்டின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள், டூரிங் ஆர்வலர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இலக்கு சந்தை;

இலக்கு சந்தை;

பிஎம்டபுள்யூ மோட்டோராட்டின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள், அமெரிக்க வாகன சந்தைகளை இலக்கு சந்தைகளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

அமெரிக்காவில் குரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களின் சந்தை, ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்த செக்மென்ட்டில் நுழைந்து, தங்களின் திறனை வெளிப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்த பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் திட்டம் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, பிஎம்டபுள்யூ மோட்டோராட்டின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள், பேக்கர் போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரியதாகவும், கட்டுமஸ்தாகவும் காட்சியளிக்கிறது.

பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம், இந்த கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிளுக்கு கூர்மையான மற்றும் வளைவுகள் கொண்ட பாடி லைன்களை வழங்கியுள்ளது. இந்த புதிய கே1600பி குரூஸர் மூலம், பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம், நவீனமாக காட்சியளிக்கும் பேக்கர் டிசைன் வடிவமைத்துள்ளனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபுள்யூ மோட்டோராட்டின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிளுக்கு, 1,632 சிசி கொள்ளளவு கொண்ட இன்-லைன் 6-சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 160 பிஹெச்பியையும், அதிகப்படியாக 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

சிறப்பு அம்சம்;

சிறப்பு அம்சம்;

பிஎம்டபுள்யூ மோட்டோராட்டின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிளை சுலபமாக பார்க்கின் செய்ய, எலக்ட்ரானிக் ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

கிடைக்கும் மாடல்கள்;

கிடைக்கும் மாடல்கள்;

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிளையும் சேர்த்து மொத்தம் 6 மோட்டார்சைக்கிள்கள் பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் சார்பாக வழங்கப்படுகிறது.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

பிஎம்டபுள்யூ மோட்டோராட்டின் புதிய கே1600பி குரூஸர் மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகலீல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

நடிகை சமந்தா பொக்கிஷமாக கருதும் அவரது ஜாகுவார் காரின் சிறப்பம்சங்கள்!

டெல்லி- கொல்கத்தா இடையே புல்லட் ரயில்... அடுத்த திட்டத்தை கையிலெடுத்த மத்திய அரசு!

உலகின் அதிகவேகச் செயல்திறன் கொண்ட கார் சுவிட்சர்லாந்து மாணவர்கள் சாதனை

English summary
BMW Motorrad showcased their K1600B motorcycle ahead of its launch. K1600B cruiser motorcycle takes inspiration from Concept 101 which was revealed in 2015. This K1600B is made by keeping in mind touring enthusiasts. Main focus of developing BMW K1600B cruiser motorcycle is American market. To know more about BMW Motorrad K1600B Cruiser Motorcycle, check here...
Story first published: Thursday, October 13, 2016, 11:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more