பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், தொடர்ந்து 5-வது முறையாக விற்பனை இலக்கை எட்டியுள்ளது

By Ravichandran

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தொடர்ந்து 5-வது முறையாக விற்பனை இலக்கை எட்டியுள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், சர்வதேச சந்தைகளில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், 500சிசி-க்கும் கூடுதலான பிரிமியம் மோட்டார்சைக்கிள் செக்மண்ட்டில் 26 நாடுகளில் சந்தை முன்னோடியாக விளங்குகிறது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் நிகழந்த அமோக விற்பனையின் காரணமாக இத்தகைய அதிக அளவிலான விற்பனை இலக்கை எட்ட முடிந்துள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் மோட்டார்சைக்கிள்களுக்கு 2015-ன் தனிப்பெரும் சந்தையாக ஜெர்மனி விளங்கியது.

சொந்த நாட்டு வாகன சந்தையான ஜெர்மனியில் மட்டும், 23,823 வாகனங்கள் விற்கபட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த விற்பனையில், 17.4 சதவிகித விற்பனை ஜெர்மனியில் செய்யபட்டுள்ளது.

இது போன்ற தொடர் விற்பனை இலக்கை எட்டுவதன் மூலம், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், தங்களின் 2020 விற்பனை இலக்கை வெற்றிகரமாக எட்டுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

bmw-motorrad-achieves-record-high-volumes-of-sales

2020-ஆம் ஆண்டிற்குள், 2,00,000 வாகனங்களை விற்றுவிட வேண்டும் என்பதே பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் இலக்காக உள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஏற்றுகொள்ளபட்ட இந்த விற்பனை இலக்கு, அதன் சரியான முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்த 2016-ஆம் ஆண்டில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், ஜி 310 ஆர் என்ற லெஜிட் மிஷின் மூலம் 500சிசி-க்கும் குறைவான திறன் கொண்ட வாகன செக்மண்டில் தடம் பதிக்க உள்ளனர். இந்த நுழைவு நிலை மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டி இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது வெற்றிகரமாக விற்பனை செய்து கொண்டிருக்கும் சந்தைகளை தாண்டி, பிஎம்டபிள்யூ புதிய சந்தைகளிலும் தடம் பதிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அடுத்ததாக ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள வாகன சந்தைகளை குறிவைத்து வருகிறது.

Most Read Articles
English summary
BMW Motorrad has achieved Record Sales for the fifth time in a row continuously. BMW Motorrad has witnessed growth in all the markets internationally and emerged as the market leader in 26 countries in the premium segment of motorcycles, which is over 500 cc. Single biggest market in 2015 was once again, Germany for BMW Motorrad.
Story first published: Tuesday, January 19, 2016, 20:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X