டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 125சிசி பைக்?

Written By:

500சிசி திறனுக்கும் குறைவான ரகத்தில் புதிய மோட்டார்சைக்கிள்களை வடிவமைப்பதற்காக ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்துடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணியில் உருவான ஜி310ஆர் என்ற புதிய பைக் மாடல் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்ததாக புதிய 125சிசி பைக் மாடலையும் அறிமுகம் செய்ய இந்த கூட்டணி பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 125சிசி பைக்?

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள், விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய 125சிசி பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 125சிசி பைக்?

ஜி310ஆர் பைக 100 சதவீதம் பிஎம்டபிள்யூ தயாரிப்பாக வருகிறது. இதன்மூலமாக, பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வட்டம் வெகுவாக உயரும் என்று பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

 டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 125சிசி பைக்?

அதேநேரத்தில், தொடர்ந்து 500சிசி திறனுக்கும் மேலான ரகத்திலான மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில்தான் அதிக கவனம் செலுத்துவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 125சிசி பைக்?

இதனிடையே, 125சிசி பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு அதிக அனுபவமும், தொழில்நுட்ப வல்லமையும் உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு புதிய 125சிசி மாடலை இரு நிறுவனங்களும் கூட்டாக தயாரிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருவதாக கருதப்படுகிறது.

 டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 125சிசி பைக்?

ஆனால், புதிய 125சிசி பைக் பிஎம்டபிள்யூ பிராண்டில் வெளிவருவது சந்தேகமாக உள்ளது. அதேநேரத்தில், யமஹா ஆர்125, கேடிஎம் ட்யூக் 125 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடுவதற்காக இந்த பைக்கை டிவிஎஸ் பிராண்டில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய 125சிசி பைக்?

இது 125சிசி பைக் மாடலாக இருந்தாலும் பிரிமியம் மாடலாகவும், சக்திவாய்ந்த மாடலாகவும் இருக்கும் என நம்பலாம்.

English summary
According to a report from MCN, BMW Motorrad is planning to go below the 300 cc mark.
Story first published: Tuesday, November 1, 2016, 9:35 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos