பிஎம்டபிள்யூ மோட்டோராட், வரும் அக்டோபரில் முறைப்படி இந்தியாவில் பிரவேசம்

Written By:

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், இந்தியாவில் முறைப்படி வரும் அக்டோபர் மாதத்தில் பிரவேசிக்கிறது.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் இந்திய பிரவேசாம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட்...

பிஎம்டபிள்யூ மோட்டோராட்...

பிஎம்டபிள்யூ மோட்டோராட் என்பது, ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் பிராண்ட் ஆகும்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், 1923-ஆம் ஆண்டு முதல் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்திய பிரவேசம்;

இந்திய பிரவேசம்;

ஸ்போர்ட்ஸ் பைக் செக்மன்ட், இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகிறது. இதில், தனது தடத்தை பாதிக்கும் நோக்கில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் பிரவேசிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இத்தாலியின் கோமோ ஏறியில் (Lake Como), மே 21 மற்றும் மே 22 ஆகிய தேதிகளில், கன்கர்சோ தி'எளிகான்ஸா வில்லா தி'எஸ்ட் (Concorso d'Eleganza Villa d'Este) என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் இந்திய பிரவேசம் குறித்த தகவல்களை இந்நிறுவனத்தின் பிரசிடென்ட் மற்றும் சிஇஓ-வான ஸ்டேஃபான் ஷால்லர் உறுதி செய்தார்.

முதல் தயாரிப்பு;

முதல் தயாரிப்பு;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் முதன் முதலாக, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கை தான் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு வழங்க உள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் வழங்கும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் டிசைன் மற்றும் உருவாக்கம் பிஎம்டபிள்யூ மூலமாகவும், இதன் உற்பத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட், ஃபியூவல் இஞ்ஜெக்டட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 9500 ஆர்பிஎம்களில் பிஹெச்பியையும், 7500 ஆர்பிஎம்களில் 28 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் முன் பகுதியில், தலைகீழாக பொருத்தபட்டுள்ள, அட்ஜஸ்ட் செய்ய முடியாத (நான்-அட்ஜஸ்டிபில்) வகையிலான 41 மில்லிமீட்டர் ஃபோர்க்குகளும், பின் பகுதியில், ஸ்விங் ஆரம் மவுண்டட் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் முன் பகுதியில், 300 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்குகளும், பின் பகுதியில், 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்குகளும் பொருத்தபட்டுள்ளது.

இந்த பைக், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டிருக்கும்.

சப்-500 சிசி பைக்;

சப்-500 சிசி பைக்;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் தான், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தயாரித்து வழங்கும் முதல் சப்-500 சிசி பைக் ஆகும்.

டிசைன்;

டிசைன்;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், போக்குவரத்தை எளிதாகும் வகையில் டிசைன் செய்யபட்டு, ரைடிங் திறன் அதிகரிக்கபட்டுள்ளது. அதே நேரத்தில், இதன் செயல்திறனிலும் எந்த விதமான குறைகளும் வைக்கப்படவில்லை.

டிவிஎஸ் மோட்டார்ஸ் மாடல்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் மாடல்;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், அமைக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில், டிவிஎஸ் மோட்டாரஸ் நிறுவனமும் டிவிஎஸ் அகுலா 310 என்ற பைக்கை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் வழங்கும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், தற்போதைய நிலையில் சிபியூ அல்லது கம்ப்லீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கபட்ட வடிவில் தான் விற்பனை செய்யபட்டு வருகிறது.

போட்டி;

போட்டி;

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், கேடிஎம் டியூக் 390 மற்றும் மஹிந்திரா மோஜோ ஆகிய வாகனங்களுடன் போட்டி போடா வேண்டி இருக்கும்.

இந்தியாவில் விற்பனை;

இந்தியாவில் விற்பனை;

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், இந்தியாவில் மொத்தம் 2 டிஸ்ட்ரிப்யூட்டர்கள் மூலம் விற்பனை செய்யபடுகிறது.

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்கு டியூஷ் மோட்டோரென் (Deutsche Motoren) நிறுவனமும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு நவ்நீத் மோட்டார்ஸ் நிறுவனம் டிஸ்ட்ரிப்யூட்டர்களாக உள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக் - அதிகாரப்பூர்வ படங்கள், தகவல்கள்

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

பிஎம்டபிள்யூ மோட்டோராட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
BMW Motorrad is finally entering India formally in October 2016. BMW Motorrad first Indian made BMW G310R bike will go on sale soon. As per partnership agreement of BMW-TVS, the BMW G310R will be designed and developed by BMW and production will be done by TVS Motors. This is first sub-500cc Bike from BMW Motorrad. To know more, check here...
Story first published: Wednesday, May 25, 2016, 18:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark