சவுந்தரராஜா மில்ஸ் அதிபருக்கு கோவையின் முதல் கவாஸாகி எச்2 சூப்பர் பைக் டெலிவிரி!

Written By:

உயர் வகை கார்கள் மற்றும் பைக்குகளை வாங்குவதிலும், வாகன பாரம்பரியத்திலும் தமிழகத்திலேயே கோவை மாநகர் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், வாகன பாரம்பரியத்திற்கு பெயர் போன கோவையின் பெருமையை உயர்த்தும் விதத்தில், உலகின் மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றான கவாஸாகி நின்ஜா எச்2 அங்கு டெலிவிரியாகியிருக்கிறது.

ஆம். கோவையை சேர்ந்த பிரபல சவுந்தரராஜா மில்ஸ் அதிபர்தான் இந்த புதிய சூப்பர் பைக்கை ஆர்டர் செய்து, நேற்று டெலிவிரி பெற்றிருக்கிறார். உலகின் அதிவேக சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றான இந்த பைக்கை இனி கோவை சாலைகளிலும் காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 உரிமையாளர்

உரிமையாளர்

சவுந்தரராஜா மில்ஸ் நிறுவனத்தின் அதிபர் யஷ்வந்த் யக்னேஷ் ரஞ்சித் சவுந்தரராஜன்தான் இந்த புதிய சூப்பர் பைக்கை வாங்கியிருக்கிறார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

கோவையிலுள்ள கவாஸாகி ஷோருமில் வைத்து கவாஸாகி நின்ஜா எச்2 பைக் நேற்று டெலிவிரி கொடுக்கப்பட்டது. அப்போது, கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

குறைந்த எண்ணிக்கை

குறைந்த எண்ணிக்கை

மிக விலை உயர்ந்த இந்த பைக் மாடல் மிக குறைவான எண்ணிக்கையில்தான் இந்தியாவில் விற்பனையாகியிருக்கிறது. அதில், ஒன்று கோவை மாநகருக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 வலிமையான கட்டமைப்பு

வலிமையான கட்டமைப்பு

கவாஸாகியின் பிரபலமான நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர் பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய சூப்பர்ஸ்போர்ட் ரக பைக் அறிமுகம் செய்யப்பட்டது. கவாஸாகி நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவின் ஒத்துழைப்புடன் இப்புதிய பைக்கின் பாடி டிசைன் செய்யப்பட்டுள்ளது. எனவே, வலிமையான கட்டமைப்பு கொண்ட பைக்காக குறிப்பிடலாம்.

பவர்ஃபுல் பைக்

பவர்ஃபுல் பைக்

யஷ்வந்த் வாங்கியிருக்கும் இந்த புதிய பைக்கில் இருக்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 998சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 133.5 என்எம் டார்க்கையும் வழங்கும். அதாவது, இந்தியாவின் சக்திவாய்ந்த பல எஸ்யூவி கார் மாடல்களுக்கு இணையான சக்திகொண்டது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

குயிக் ஷிஃப்டர் வசதி

குயிக் ஷிஃப்டர் வசதி

இந்த பைக்கில் இருக்கும் குயிக் ஷிஃப்டர் என்ற தொழில்நுட்ப வசதி மூலமாக, க்ளட்சை பிடிக்காமலேயே, கியரை மாற்ற முடியும். பெரும்பாலும் ரேஸ் பைக்குகளில்தான் இந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

நம் நாட்டில் விற்பனையாகும் பல சொகுசு கார்களைவிட இதன் டாப் ஸ்பீடு அதிகம். அதாவது, மணிக்கு 300 கிமீ வேகம் வரை பறக்கும்.

ஹெட்லைட்

ஹெட்லைட்

காசுக்கு ஏற்ற தோசை என்பதுபோல், பல்வேறு சிறப்பம்சங்களை இந்த பைக் கொண்டுள்ளது. அதில், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பைலட் விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அதிவேகமாக இயக்குவதற்கான இந்த பைக்கை எளிதாக கட்டுப்படுத்தவும், பாதுகாப்பாக பயணிக்கும் விதத்தில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டீயரிங் டேம்பர் ஆகியவை உள்ளன.

 டிராக்ஷன் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல்

மூன்றுவிதமாக மாற்றிக்கொள்ளும் வசதியுடன்கூடிய டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஒன்று டிராக்கில் பயன்படுத்தும் விதமாகவும், இரண்டாவது சாதாரண சாலைகளுக்கானதாகவும் மற்றொன்று ஈரப்பதமான சாலைகளில் செல்வதற்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணம்

வண்ணம்

யஷ்வந்த் டெலிவிரி பெற்றிருக்கும் கருப்பு நிறத்தில் மட்டுமே இந்த பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

இந்த பைக்கை வாங்குவதற்கு ரூ.10 லட்சம் முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். ரூ.29 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை கொண்டது. வரிகள் மற்றும் இதர கட்டணங்களை சேர்த்து ரூ.32 லட்சம் ஆன்ரோடு விலை மதிப்பு கொண்டது.

பிரபல மாடல்

கிரிக்கெட் உலகின் தல டோணியிடமும் இந்த பைக் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
English summary
Coimbatore Gets First Kawasaki Ninja H2 Super Bike.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark