ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை சட்டம் டெஹ்ராடூன் நகரில் அமல்

Written By:

ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற சட்டம் டெஹ்ராடூன் நகரில் அமலுக்கு வந்துள்ளது.

தற்போதைய நிலையில், சாலை பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. அதுவும், 2 சக்கர வாகனங்கள் விஷயத்தில், சாலை பாதுகாப்பு மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இதனால், ஹெல்மெட் அணிவதை அதிகரிக்கும் நோக்கில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான், இந்த சட்டம் உத்தராகண்ட் தலைநகரான டெஹ்ராடூன் நகரில் அமல்படுத்தபட்டுள்ளது.

dehradun-implemented-no-helmet-no-petrol-rule-recently

இது தொடர்பாக, உத்தராகண்ட் போக்குவரத்து துறை, அனைத்து பெட்ரோல் பங்குகளிலும், ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற சட்டம், அமல்படுத்தப்பட வேண்டும் என 1 3 மாவட்ட மாஜிஸ்டிரேட்-கள் மற்றும் அலுவலர்களுக்கும் முறைப்படி எழுத்து பூர்வமாக அறிவிப்பு அனுப்பியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், "ஹெல்மெட் அணிவது தொடர்பான ஆணைகள் சரியாக பின்படுத்தப்பட வேண்டும். இதனால் தான், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எழுத்து பூர்வமாக அறிவிப்பு வழங்கியுள்ளோம்.

மேலும், 2 சக்கர வாகன போக்குவரத்து பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், மோட்டார்சைக்கிள் கடைகளே கூட ஹெல்மெட்களை விற்கலாம் என்ற வகையிலான நடவடிக்கைகளை யும் ஊக்கப்படுத்தி வருகிறோம்" என கூடுதல் போக்குவரத்து ஆணையர் சுனிதா சிங் தெரிவித்தார்.

English summary
No Helmet, No Petrol - Rule is implemented in Dehradun, Capital of Uttarakhand. To encourage two-wheeler riders to wear helmet, many parts of India are implementing 'No Helmet, No Petrol' rule. Regaring this, Uttarakhand Transport Department wrote to 13 district magistrates and officials to ensure that the 'No Helmet, No Petrol' rule is implemented at all petrol stations...
Story first published: Monday, July 11, 2016, 11:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark