கோயம்புத்தூரில் டிஎஸ்கே பெனெல்லியின் புதிய ஷோரூம் திறக்கபட்டது

By Ravichandran

டிஎஸ்கே பெனெல்லி நிறுவனத்தின் புதிய ஷோரூம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் திறக்கபட்டுள்ளது.

டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் சூப்பர்பைக் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். பெனெல்லி நிறுவனம், கோயம்புத்தூரில் தங்களின் முதல் ஷோரூமை துவக்கியுள்ளனர். இந்த ஷோரூம் திறப்பு விழாவில், டிஎஸ்கே பெனெல்லி இந்தியாவின் தலைவர் ஷிரிஷ் குல்கர்னி பங்கேற்றார்.

dsk-benelli-bike-showroom-launched-in-coimbatore-tamilnadu

டிஎஸ்கே பெனெல்லி கோயம்புத்தூர் ஷோரூமில் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து மாடல்களும் காட்சி படுத்தபட்டு, விற்பனையும் செய்யபடுகிறது. 250 சிசி முதல் 1131 சிசி வரையிலான பைக்குகள் விற்பனைக்கு உள்ளது. தற்போதைய நிலையில், டிஎஸ்கே பெனெல்லி மொத்தம் 6 மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றனர்.

டிஎஸ்கே பெனெல்லியின் இந்த கோயம்புத்தூர் ஷோரூம், நல்ல இணைப்பு வசதிகள் கொண்ட பிரிமியம் பகுதியில் அமைக்கபட்டுள்ளது. விற்பனை நடவடிக்கைகளை தவிர்த்து, உதிரி பாகங்கள் விற்பனையும் நடைபெறுகிறது. இதோடு மட்டுமல்லாமல், இங்கு நன்கு பயிற்சி பெற்ற டெக்னிஷீயன்கள் மூலம் சர்வீஸ் பணிகளும் மேற்கொள்ளபடுகிறது.

டிஎஸ்கே பெனெல்லி கோயம்புத்தூர் ஷோரூம் அமைந்துள்ள முகவரி;
14, Nehru Stadium,
VOC Park,
Coimbatore.

14, நேரு விளையாட்டு மைதானம்,
வ.உ.சி. பூங்கா,
கோயம்புத்தூர்.

Most Read Articles

English summary
Italian Superbiking brand DSK Benelli has launched their first Exclusive Showroom in Coimbatore. All DSK Benelli models sold in India are available in this new Showroom. Apart from the showcasing and sales of Bikes, spare parts are also sold. Moreover, servicing is also done by well-trained Technicians. To know more about this Showroom launch, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X