பெனெல்லி பைக்குகளின் விலை உயர்ந்தது - விபரம்

Written By:

குறுகிய காலத்தில் இந்திய இளைஞர்களின் மிக விருப்பமான பைக் பிராண்டாக பெனெல்லி மாறியிருக்கிறது. மேலும், பெனெல்லி பைக்குகள் விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகின்றன.

இந்தநிலையில், தனது பைக்குகளின் விலையை பெனெல்லி நிறுவனம் திடீரென உயர்த்தியிருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு நாட்டின் சில மாநிலங்களில் விதிக்கப்படும் அதிக வாட் வரிதான் காரணம் என்று பெனெல்லி தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ரூ.6,000 முதல் ரூ.43,000 வரை பெனெல்லி பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது மற்றும் புதிய விலை விபரத்தை தொடர்ந்து காணலாம்.

குறைவான விலை மாடலான பெனெல்லி டிஎன்டி 25 பைக்கின் விலை ரூ.7,000 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இனி இந்த பைக் மாடல் ரூ.1.77 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.

பெனெல்லி டிஎன்டி 25 பைக்கின் பிரிமியம் மாடலின் விலையும் ரூ.7,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ரூ.1.83 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் இனி விற்கப்படும்.

பெனெல்லி டிஎன்டி300 பைக்கின் விலை ரூ.6,000 உயர்த்தப்பட்டு, இனி ரூ.3.09 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும். 

பெனெல்லி டிஎன்டி 600ஜிடி பைக்கன் விலை ரூ.24,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பைக்கின் விலை இனி ரூ.6.15 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.

பெனெல்லியின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான ஏபிஎஸ் பிரேக் வசதி கொண்ட டிஎன்டி 600ஐ பைக்கின் விலை ரூ.41,000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் விற்பனை செய்யப்படும் ஒரே பெனெல்லி பைக்கான இதன் விலை இனி ரூ.5.86 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

பெனெல்லி டிஎன்டி 899 பைக் மற்றும் டிஎன்டி ஆர் மாடல்களின் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. டிஎன்டி 899 பைக்கின் விலை ரூ.35,000 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. டிஎந்டி ஆர் பைக்கன் விலை ரூ.43,000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால், பெனெல்லி டிஎன்டி 899 பைக் இனி ரூ.9.73 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஎன்டி ஆர் பைக் ரூ.12.11 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். பண்டிகை காலத்தில் பெனெல்லி பைக் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்துள்ளது.

English summary
DSK Benelli Increase Pricing Of Their Motorcycles During Festive Season. Read in Tamil.
Story first published: Saturday, October 8, 2016, 17:37 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos