பெங்களூருவில் டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக் பிராந்திய அளவில் அறிமுகம்

By Ravichandran

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக் பிராந்திய அளவில், பெங்களூருவில் அறிமுகம் செய்யபட்டது.

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டுகாட்டி 959 பனிகேல்...

டுகாட்டி 959 பனிகேல்...

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் தான், இந்த டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக்கை தயாரித்து வழங்குகிறது.

முன்னதாக, டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக், இந்தியா பைக் வீக் திருவிழாவின் பொது இந்தய அளவில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக், டுகாட்டியின் 955 சிசி, எல்-ட்வின் சிலிண்டர் உடைய, டெஸ்மோட்ரோரோமிக் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 157 பிஹெச்பியையும், 107.4 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

எக்ஸ்ஹாஸ்ட்;

எக்ஸ்ஹாஸ்ட்;

டுகாட்டி நிறுவனம், இந்த டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக்கிற்கு 2-1-2 எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டத்தை ஏற்று கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

பாதுகாப்பை பொருத்த வரை, டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக்கிற்கு, போஷ் நிறுவனம் வழங்கும் நவீன ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக், 8-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், டுகாட்டி க்விக் ஷிஃப்ட், டுகாட்டி டேட்டா அனலைஸர், 3 டிரைவிங் மோட்கள், பிரெல்லி டையாப்லோ ரோஸ்ஸோ கோர்ஸா டயர்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

தற்போதைய நிலையில், டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக், டுகாட்டி ரெட் மற்றும் பிளாக் ஆகிய 2 நிறங்களில் மட்டுமே கிடைக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக், பெங்களூரு, டெல்லி, குர்கான், மும்பை மற்றும் பூனே ஆகிய நகரங்களில் உள்ள டுகாட்டி ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கூடுதல் ஷோரூம்கள்;

கூடுதல் ஷோரூம்கள்;

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், 2016-ஆம் ஆண்டு இறுதிக்குள், மேலும் 2 புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளனர்.

ஷோரூம்;

ஷோரூம்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக், யூபி சிட்டி மால் என்ற பெயரில் பெங்களூருவில் உள்ள டுகாட்டி ஷோரூமில் டிஸ்பிளே மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலை;

விலை;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர்பைக், 14.21 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக், இந்தியா பைக் வீக் திருவிழாவில் அறிமுகம்

தென்இந்தியாவில் டுகாட்டியின் முதல் பைக் ஷோரூம் பெங்களூரூவில் திறப்பு

டுகாட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
Ducati India has launched their Ducati 959 Panigale Superbike at Regional level in Bengaluru. 959 Panigale by Ducati will be on display at Bengaluru dealership in UB City Mall. Ducati 959 Panigale is available only in Ducati Red with Black Colors. This Italian superbike is available at an attractive price of Rs. 14.21 lakh ex-showroom (Bengaluru). To know more, check here...
Story first published: Saturday, June 4, 2016, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X