டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

Written By:

டுகாட்டி நிறுவனம் வழங்கும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன்...

மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன்...

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், தாங்கள் தயாரித்து வழங்கும் புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் என்ற பெயரிலான ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய வாகன சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

இது, டுகாட்டி நிறுவனத்தின் 90-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யபட்டது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள், பைக்ஸ் பீக் மலை ஏற்றம் நிகழ்ச்சியின் போது அறிமுகம் செய்யபட்டது. இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம், பீக் மலை ஏற்றம் நிகழ்ச்சியின் 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாகவும் அறிமுகம் செய்யப்படுகிறது.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், லிமிடெட் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த வாகனத்தின் மாடலில் வெறும் 400 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், 1198.4 சிசி, எல்-ட்வின் சிலிண்டர் உடைய லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 160 பிஹெச்பியையும், 136 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், லைட் ஆக்ஷன் ஹைட்ராலிக் கிளட்ச் உடைய 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் முழுவதுமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆஹ்ளின்ஸ் ஃபிரண்ட் ஃபோர்க்குகள், பின் பக்கத்தில் டிடிஎக்ஸ்36 ரியர் ஷாக் சஸ்பென்ஷன் அமைப்பும் பொருத்தபட்டுள்ளது.

கார்பன் ஃபைபர்;

கார்பன் ஃபைபர்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளில், கார்பன் ஃபைபர் பெரும் அளவில் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சிறந்த உதாரணமாக, பெர்ஃபார்மன்ஸ் டெர்மிக்னோனி கார்பன் ஃபைபர் சைலன்ஸரை கூறலாம்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளில், கார்ணரிங் எபிஎஸ், முழு எல்இடி ஹெட்லைட்களில் டுகாட்டி கார்ணரிங் லைட்கள், டுகாட்டி சேஃப்டி பேக்கு, டுகாட்டி வீலி கண்ட்ரோல், டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல் கொண்டுள்ளது.

மேலும், ரைடிங் மோட், ஹாண்ட்ஸ்-ஃப்ரீ இக்னிஷன் மற்றும் பாஷ் 9ME மல்டி-கேளிபரேஷன் கார்னரிங் ஏபிஎஸ் (Bosch 9ME multi-calibration cornering ABS) ஆகியவற்றையும் டுகாட்டி இஞ்ஜினியர்கள் பொருத்தியுள்ளனர்.

இந்த மோட்டார்சைக்கிளில், புளுடூத் கனெக்ட்டிவிட்டி உடைய க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளது. இதனால், இந்த மோட்டார்சைக்கிளின் ரைடர்கள், இதன் ஸ்விட்ச் கியர்களை ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

எம்டி கருத்து;

எம்டி கருத்து;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளின் அறிமுகம் குறித்து, டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ரவி ஆவலூர் மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

"டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், டூரிங் திறன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் ஒன்றாக ஒருங்கிணைந்த இரு சக்கர வாகனம் ஆகும். ரேசிங் பிரபாவம் கொண்ட தோற்றம் மற்றும் உயர் தர தொழில்நுட்பங்கள் கொண்ட டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளை வாடிக்கையாளர்கள் நிச்சயம் வெகுவாக விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என ரவி ஆவலூர் தெரவித்தார்.

வண்ண தேர்வுகள்;

வண்ண தேர்வுகள்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், டுகாட்டி ரெட் உடைய வைட் ரெட் மற்றும் பிளாக் லிவரி தேர்வில் வழங்கப்படுகிறது.

விற்பனை;

விற்பனை;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், டெல்லி, குர்கான், பூனே மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள டுகாட்டி ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை;

விலை;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், 20.06 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து துவங்குகிறது.

சாதனை பதிவு;

சாதனை பதிவு;

கார்லின் டன் (Carlin Dunne) என்ற ரைடர் தான், அமெரிக்காவில் உள்ள பைக்ஸ் என்ற இந்த மலையினில் 9 நிமிடம் மற்றும் 53 நொடிகளில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அவர், 2012-ல் மிக வேகமான பெட்ரோல் 2-வீலரான டுகாட்டி மல்டிஸ்ட்ராடா மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி தான் இந்த சாதனையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், அமெரிக்காவில் உள்ள இந்த பைக்ஸ் மலை ஏற்றத்தின் 100-வது ஆண்டு விழாவை நினைவு கூறும் விதமாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

புதிய மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்கில் உலகை வலம் வர வாய்ப்பு - முழு விவரங்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் - கூடுதல் படங்கள்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் - கூடுதல் படங்கள்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் - கூடுதல் படங்கள்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் - கூடுதல் படங்கள்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் - கூடுதல் படங்கள்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் - கூடுதல் படங்கள்

English summary
Italy based two wheeler manufacturer Ducati has launched their Ducati Multistrada 1200 Pikes Peak Motorcycle in India. Ducati Multistrada 1200 Pikes Peak was unveiled at 2016 Pikes Peak Hillclimb event last week. Only 400 of these bikes will ever be built. This limited run bike was made to celebrate the 100th edition of Pikes Peak hill climb and 90 years of Ducati. To know more, check here...
Story first published: Tuesday, July 5, 2016, 11:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark