டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!

Written By:

உலக அளவில் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பு பெற்ற சூப்பர் பைக் நிறுவனமாக இத்தாலியை சேர்ந்த டுகாட்டி விளங்குகிறது. இந்தியாவிலும் டுகாட்டி பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

குறிப்பாக, டுகாட்டி நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக விற்பனை செய்யப்படும் ஸ்க்ராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

டுகாட்டி கொண்டாட்டம்

டுகாட்டி கொண்டாட்டம்

இந்த நிலையில், டுகாட்டி நிறுவனம் துவங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதத்தில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது டுகாட்டி.

விலை குறைப்பு

விலை குறைப்பு

அதன்படி, இந்திய வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி அறிவிப்பை டுகாட்டி வெளியிட்டு இருக்கிறது. ஸ்க்ராம்ப்ளர் ரகத்தில் விற்பனை செய்யப்படும் 4 மாடல்களின் விலை ரூ.90,000 குறைக்கப்பட்டுள்ளது.

இப்போதைய விலை

இப்போதைய விலை

இதுவரை ரூ.7.28 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல் இப்போது ரூ.6.07 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 சிறப்பு கடன் திட்டம்

சிறப்பு கடன் திட்டம்

இந்த அதிரடி தள்ளுபடி மட்டுமல்ல. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களையும் அறிவித்துள்ளது டுகாட்டி. அதன்படி, அதிகபட்சமாக 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவதற்கான மாதத் தவணை கொண்ட கடன் திட்டத்தில் இந்த பைக் மாடல்களை வாங்க முடியும். அடுத்த மாதம் 31ந் தேதி வரை முன்பதிவு செய்பவர்கள் இந்த சலுகைகளை பெற முடியும்.

தனித்துவமான மாடல்

தனித்துவமான மாடல்

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வகை மாடல்கள் மிகவும் தனித்துவமான டிசைன் கொண்டவை. மேலும், சில மாற்றங்களுடன் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான், கிளாசிக், அர்பன் என்டியூரோ மற்றும் ஃபுல் த்ராட்டில் ஆகிய 4 மாடல்களில் இந்தியாவில் கிடைக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்குகளில் 75 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 803 சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புரத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளது.

 இந்தியாவிலும் வரவேற்பு

இந்தியாவிலும் வரவேற்பு

1926ம் ஆண்டு துவங்கப்பட்ட டுகாட்டி நிறுவனம் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி சூப்பர் பைக் பிராண்டாக விளங்குகிறது. இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் அனைத்து பைக்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ரவி அவலுர் தெரிவித்துள்ளார்.

English summary
Ducati is offering a discount of Rs 90,000 on the Scrambler range in India, which can also be availed through finance options.
Story first published: Wednesday, November 30, 2016, 13:27 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos