புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

டுகாட்டி நிறுவனம் வழங்கும் புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டுகாட்டிக்கு சிக்கல்;

டுகாட்டிக்கு சிக்கல்;

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், 2014 வேர்ல்ட் டுகாட்டி வீக் முதல் சிறப்பான பைக்குகளை தயாரித்து வழங்கி நம்மை ஆச்சர்யமூட்டும் வழக்கம் கொண்டுள்ளனர்.

ஆனால், ஒவ்வொரு முறையும், யாரேனும் ஒருவர், டுகாட்டி நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை முறைப்படி அறிமுகம் செய்வதற்கு முன்னர், அதன் படங்களை வெளியிட்டு டுகாட்டிக்கு நெருக்கடி வழங்கி வருகின்றனர்.

புராஜக்ட் 1312;

புராஜக்ட் 1312;

டுகாட்டி நிறுவனம் தயாரித்து வரும் சமீபத்திய பைக்கானது, புராஜக்ட் 1312 என்ற (கோட் நேம்) குறியீட்டு பெயருடன் அழைக்கப்படுகிறது.

இந்த புராஜக்ட் 1312 பைக் தான், சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக் என அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படங்கள் தான் தற்போது வெளியாகி இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கின் ட்ரெல்லிஸ் ஃபிரேம் மட்டும் எக்ஸ்டியாவெல் மாடலில் இருந்து ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. இதை தவிர்த்து, டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக் முற்றிலும் புதிய பைக் என்றே கூறலாம்.

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கானது, டிராக் பெர்ஃபார்மன்ஸ் காட்டிலும், சாலைகளில் சிறந்த பிரயோகம் விரும்பும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக், மிக சவுகரியமான ரைடிங் நிலைப்பாடு கொண்டிருக்கும்.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக், சூப்பர்ஸ்போர்ட் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் எஸ் என 2 மாடல்களில் வெளியாகும்.

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும், ஆஹ்ளின்ஸ் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும். மேலும், இது டிடாச்சபிள் (பிரித்து எடுக்க கூடிய) ரியர் சீட் கவுல் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கிற்கு, ஹைப்பர் ஹைப்பர் மோட்டோராட் மாடலின் 939 சிசி இஞ்சினை, டுகாட்டி நிறுவனம் பொருத்தியுள்ளது. ஆனால், 80% இஞ்ஜின் கூறுகள் புதியதாக உள்ளன.

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கிற்கு, மல்டிஸ்ட்ராடா மாடலில் இருந்து ஏற்கபட்டுள்ள டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் உடைய டேஷ்போர்ட் பொருத்தபட்டுள்ளது.

ரைடர் மோட்கள்;

ரைடர் மோட்கள்;

மேம்படுத்தப்பட்ட நகர்புற உபயோகங்களுக்கு, டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கில் 3 ரைடர் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரைடர் மோட்கள், 8-நிலை டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் முழுமையாக அட்ஜஸ்டிபிள் சஸ்பென்ஷன் சேர்க்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டுகாட்டி நிறுவனம், இந்த டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக்கினை மிலன் மோட்டார் ஷோவில் முழுமையாக அறிமுகம் செய்யப்படும்.

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக், உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளதாக, டுகாட்டியின் உயர் அதிகாரி பாவ்லோ குவாட்ரினோ உறுதி செய்தார்.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் எஸ் பைக், பல்வேறு வாகன சந்தைகளில், 2017-ஆம் ஆண்டு கோடைகாலத்தின் போது, விற்பனைக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்கில் உலகை வலம் வர வாய்ப்பு - முழு விவரங்கள்

தென்இந்தியாவில் டுகாட்டியின் முதல் பைக் ஷோரூம் பெங்களூரூவில் திறப்பு

டுகாட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pics Credit ; www.motorcyclenews.com

English summary
Italian 2 Wheeler manufacturer has habit of giving some surprise treat for its fans by presenting top class bikes since 2014 World Ducati Week. Unfortunately for Ducati, someone always unmasks their bikes before official launch. This year, Spy Pics of Ducati's latest project bike, codenamed Project 1312, which may be called Supersport S is released. To know more, check here...
Story first published: Thursday, July 7, 2016, 11:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark