ஷோரூம்களுக்கு வருவதற்கு முன்பே எக்ஸ்டயாவெல் குரூஸர் ஹிட் - டுகாட்டி அறிவிப்பு

Written By:

ஷோரூம்களில் வந்தடைவதற்கு முன்பே எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிள் ஹிட்டாகிவிட்டது என டுகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. எக்ஸ்டயாவெல் தான், இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் குரூஸர் செக்மென்ட்டில் அறிமுகம் செய்த சமீபத்திய தயாரிப்பு ஆகும். இது, இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி சரியான நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்டயாவெல் குரூஸர் ஹிட் மாடலானது தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

எம்டி கருத்து;

எம்டி கருத்து;

டுகாட்டி இந்தியாவின் எம்டியான ரவி அவலூர், இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு பெற்று வருவதாக தெரிவித்தார். ஆனால், இது வரை அவ்வளவு டுகாட்டி எக்ஸ்டயாவெல் விற்பனையானது என தெரிவிக்கவில்லை.

விலை;

விலை;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிள், 15.7 லட்சம் ரூபாய் முதல் 18.5 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகப்படியான டுகாட்டி எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிள்கள், பெங்களூருவில் உள்ள மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களால் தேர்வு செய்யபட்டுள்ளது.

மறுபிரவேசம்;

மறுபிரவேசம்;

இத்தாலிய மோட்டார்சைக்கிள் பிராண்ட்டான டுகாட்டி, 2015-ல் இந்தியாவில் நேரடி விற்பனையை துவக்கி மறுபிரவேசம் செய்தது. டுகாட்டியின் மோட்டார்சைக்கிள்கள், 7 லட்சம் ரூபாய் முதல் 55 லட்சம் ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 12 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் மாடல்களுக்கு தான் அதிகப்படியான டிமான்ட் உள்ளது.

விற்பனை குறியீடு;

விற்பனை குறியீடு;

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், 500 சிசி முதல் 600 சிசி-க்கும் இடையிலான ரேஞ்ச்சில், சுமார் 2,200 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், 1000 சிசி செக்மென்ட்டில், குரூஸர்கள் தான் அதிக அளவில் விற்பனையாகிறது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல், டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களிலும், 1,262 சிசி, டெஸ்டாஸ்ரெட்டா எல்-ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 156 பிஹெச்பியையும், 129 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் வேரியன்ட்களின் இஞ்ஜின்கள், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. ரியர் வீல்களுக்கு பவர் கடத்தும் வகையில், டுகாட்டி நிறுவனம், இந்த குரூஸர் மோட்டார்சைக்கிள்களுக்கு சிங்கிள்-சைட் ஸ்விங் ஆர்ம் மற்றும் பெல்ட் டிரைவ் வழங்கி இருக்கிறது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மோட்டார்சைக்கிள், அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையிலான தலைகீழாக பொருத்தப்பட்டுள்ள ஃபிரண்ட் ஃபோர்க்குகள், பின் பகுதியில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, டுகாட்டி நிறுவனம், இந்த எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் மோட்டார்சைக்கிள்களில் டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், ரைட் மோட்கள், கார்ணரிங் ஏபிஎஸ் மற்றும் டுகாட்டி லாஞ்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கியுள்ளது.

கூடுதலாக, எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிளில் குரூஸ் கண்ட்ரோல், முழு எல்இடி லைட்டிங், பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், வேரியபிள் ரைடிங் மோட்கள், கீலஸ் இக்னிஷன் மற்றும் பேக்லிட் ஹேண்டில்பார் ஸ்விட்ச் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

இந்திய வாகன சந்தைகளில், டுகாட்டி எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிள், ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள்களுடன் போட்டி போடுகிறது.

புக்கிங்;

புக்கிங்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் குரூஸர் மோட்டார்சைக்கிளின் புக்கிங், இந்தியா முழுவதும் துவங்கிவிட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அஜீத் கைகளுக்கு சவால் விட்ட டுகாட்டி டயாவெல் - ஒரு பார்வை

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குரூஸர் மோட்டார்சைக்கிள் செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati's latest offering in cruiser motorcycle segment, XDiavel is big hit in Indian market even before this motorcycle lands in showrooms. Ravi Avalur, MD, Ducati India, confirmed that this motorcycle has received good response from customers, although exact number of units sold were not disclosed. To know more about Ducati XDiavel's success, check here...
Story first published: Tuesday, September 20, 2016, 17:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark