டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் செப்டம்பர் 15-ல் இந்தியாவில் அறிமுகம்

Written By:

டுகாட்டி நிறுவனத்தின் எக்ஸ்டயாவெல் குருஸர் செப்டம்பர் 15-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது. டூ வீலர் நிறுவணங்களும், கார் உற்பத்தி நிறுவனங்களும், இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களின் போதும், அதற்கு முன்னதாகவும் ஏராளமான தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

அவ்வகையில், டுகாட்டி நிறுவனமும் இந்த பண்டிகை காலங்களின் போது, தங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. டுகாட்டியின் அறிமுகங்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகமாகும் மாடல்கள்;

அறிமுகமாகும் மாடல்கள்;

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம், தங்களின் குருஸர் மோட்டார்சைக்கிள்களில் எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் என்ற இரு வேரியன்ட்களையும் ஏற்கனவே சர்வதேச சந்திகளில் விற்பனை செய்து வருகிறது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் அனைத்து மாடல்களையும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவிலும் அறிமுகம் செய்து வருகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் மோட்டார்சைக்கிள்களில், 1,262 சிசி, டெஸ்டாஸ்ரெட்டா எல்-ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 155 பிஹெச்பியையும், 129 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் மோட்டார்சைக்கிள்களின் இஞ்ஜின்கள் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மேலும், ரியர் வீல்களுக்கு பவர் கடத்தும் வகையில், டுகாட்டி நிறுவனம், இந்த குருஸர் மோட்டார்சைக்கிள்களுக்கு சிங்கிள்-சைட் ஸ்விங் ஆர்ம் மற்றும் பெல்ட் டிரைவ் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, டுகாட்டி நிறுவனம், இந்த எக்ஸ்டயாவெல் மற்றும் எக்ஸ்டயாவெல் எஸ் மோட்டார்சைக்கிள்களில் டிராக்ஷன் கண்ட்ரோல், ரைட் மோட்கள், கார்ணரிங் ஏபிஎஸ் மற்றும் லாஞ்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை சேர்த்துள்ளது.

மேலும், எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில் குரூஸ் கண்ட்ரோல், முழு எல்இடி லைட்டிங் மற்றும் பேக்லிட் ஹேண்டில்பார் ஸ்விட்ச்களும் பொருத்தப்பட்டுள்ளது.

விலை;

விலை;

இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, டுகாட்டி எக்ஸ்டயாவெல் மோட்டார்சைக்கிளின் விலை 14.5 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், பிரிமியம் மோட்டார்சைக்கிளான எக்ஸ்டயாவெல் எஸ், 16 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கும் கூடுதலாக விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati will launch their XDiavel Cruiser in India on September 15. Both variants - XDiavel and XDiavel S of the cruiser motorcycle will be introduced in India. In terms of safety, Ducati will equip the XDiavel models with traction control, ride modes, cornering ABS, and launch control. The XDiavel cruiser will also feature cruise control, full LED lighting etc. To know more, check here...
Story first published: Sunday, September 11, 2016, 7:05 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos