டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம்

Written By:

டுகாட்டி மோட்டார்ஸ் நிறுவனம், எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளை செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர்...

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர்...

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம் தயாரித்து வழங்கும் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரிமியம் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் தான், டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முழுமுதல் குருஸர் ஆகும்.

இது, இந்த ஆண்டில் வரும் பண்டிகை காலத்தில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள், டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் என 2 வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் ஆகிய 2 வேரியன்ட்களுக்குமே லிக்விட்-கூலிங் வசதியுடைய 1262சிசி, எல்-ட்வின், டெஸ்டாஸ்ரெட்டா இஞ்ஜின் போருத்தப்பட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 155 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 129 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

டுகாட்டி இஞ்ஜினியர்கள், இந்த டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிளில், ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்ணரிங் ஏபிஎஸ் போன்ற சிறப்பம்சங்களை சேர்த்துள்ளனர்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் வேரியன்ட் மேட் பிளாக் பெயின்ட் ஸ்கீமிலும், டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் வேரியன்ட், கிளாஸ்ஸி பிளாக் நிறத்திலும் வழங்கப்படும்.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும், டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் வேரியன்ட்டில் பிரமியம் சீட், புளுடூத் கனெக்டிவிட்டி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வித்தியாசமான அல்லாய் வீல்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள், ஹார்லி டேவிட்சன் பிரேக்அவுட் மற்றும் திரயம்ஃப் தண்டர்பர்ட் ஸ்டார்ம் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

ப்ரீ-புக்கிங்;

ப்ரீ-புக்கிங்;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள், இந்தியா முதுவதும் உள்ள அனைத்து டுகாட்டி ஷோரூம்களிலும் ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் ஏற்கபட்டு வருகிறது.

ரூபாய் 2 லட்சம் என்ற கட்டணம் செலுத்தப்படும் பட்சத்தில், ப்ரீ-புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சிறப்பு சலுகை;

சிறப்பு சலுகை;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் ஆகிய 2 வேரியன்ட்களுக்குமே, 2-வருடம் அல்லது அளவற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

விலை;

விலை;

டுகாட்டி எக்ஸ்டயாவெல் மற்றும் டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் ஆகிய 2 வேரியன்ட்களின் எதிர்பார்க்கப்படும் விலைகளை தெரிந்து கொள்ளலாம்.

டுகாட்டி எக்ஸ்டயாவெல் - 15.50 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் - 18.10 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அஜீத் கைககளுக்கு சவால் விட்ட டுகாட்டி டயாவெல் - ஒரு பார்வை

டயாவெல் தொடர்புடைய செய்திகள்

டுகாட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

டுகாட்டியின் எக்ஸ்டயாவெல் குருஸர் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

English summary
Ducati Motors will launch their new XDiavel Cruiser in Indian market sometime during this festive season. Ducati XDiavel Cruiser is offered in two variants for the Indian market - Ducati XDiavel and Ducati XDiavel S. This is Ducati's first attempt of introducing a proper cruiser for India. XDiavel can be pre-booked across India at Ducati dealerships for amount of Rs. 2 lakh. To know more, check here...
Story first published: Wednesday, July 27, 2016, 12:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark