ஐடர் மோட்டார்ஸ், 2 மாதத்தில் 30 ஷோரூம்களை திறக்க திட்டம்

Written By:

ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், 2 மாதத்தில் 30 டீலர்ஷிப்களை திறக்க திட்டமிட்டு வருகிறது.

ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் பரவலாக சுமார் 30 ஷோரூம்களை நிறுவ முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

eider-motors-plans-set-up-30-dealerships-in-2-months

தற்போதைய நிலையில், ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்களின் பிராண்டின் கீழ் 6 மாடல்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம், வேகமாக தங்களின் தடத்தை விரிவு படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதிலும், நெடுநோக்கில் 80 ஷோரூம்களை திறப்பதே இந்த நிறுவனத்தின் இலக்காக உள்ளது. தற்போதைக்கு, தங்களின் ஹைதராபாத் ஷோரூம் மூலமாக இந்த நிறுவனம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், மகாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர், மிசோராம், கேரளா, நாகாலாந்து மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளது. இதில், சில இடங்களில் உள்ள ஷோரூம்கள் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

eider-motors-plans-set-up-30-showrooms-in-two-months

ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், ஸ்கூட்டர்கள், குரூஸர்கள், எலக்ட்ரிக் பைக்குகள், டர்ட் பைக்குகள் மற்றும் கம்யூட்டர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் விற்கப்படும் வாகனங்கள், 110 சிசி முதல் 650 சிசி வரையிலான டிஸ்பிளேஸ்மன்ட் கொண்டுள்ளவையாக உள்ளது.

ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் விற்கப்படும் வாகனங்கள், 50,000 ரூபாய் முதல் 4,00,000 ரூபாய் வரையிலான (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் இதன் தயாரிப்புகள் குறித்து அதிக அளவிலான தகவல்கள் எதுவும் தெரியாமல் உள்ளது. காலம் போக போக தான், இது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

English summary
Eider Motors - The Hyderabad-based two-wheeler company is looking to set up 30 new dealerships in India in next two months. Eider is selling six models under its brand in Indian. It plans to open a total of 80 dealerships across country. Eider Motors sells scooters, cruisers, electric bikes, sports bikes, dirt bikes, and commuters. To know more, check here...
Story first published: Saturday, May 28, 2016, 16:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more