ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள் ரேஞ்ச் இந்தியாவில் அறிமுகம்
ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம், ஸ்விஸ் மிலிட்டரி பைசைக்கிள்-களின் (சைக்கிள் - மிதிவண்டி) ரேஞ்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.
ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்தியாவை சேர்ந்த முன்னணி சைக்கிள் நிறுவனமான ஃபயர்ஃபாக்ஸ் , உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான ஸ்விஸ் மிலிட்டரி நிறுவனத்துடன் இணைந்து இவற்றை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த 2 நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த சைக்கிள்கள் சர்வதேச தரத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்விஸ் மிலிட்டரி பைசைக்கிள் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபயர்ஃபாக்ஸ்...
ஃபயர்ஃபாக்ஸ் பைசைக்கிள்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் 2005-ஆம் ஆண்டில் பிரவேசம் செய்தனர்.
இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 95 நகரங்களில் மொத்தம் 200 டீலர்ஷிப்கள் கொண்டுள்ளனர். இந்நிறுவனம், வரும் ஆண்டுகளில் 40 புதிய ஸ்டார்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

விற்கப்படும் விதம்;
ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் தான், இந்த ஸ்விஸ் மிலிட்டரி பைசைக்கிள்களை இந்தியா வாகன சந்தைகளில் வழங்கின்றனர். ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள்கள், இந்திய வாகன சந்தைகளில் பாதி கட்டிமுடிக்கப்பட (Semi-Knocked Down (SKD)) விதத்திலேயே அறிமுகம் செய்யப்படுகிறது.

மாடல்கள்;
ஸ்விஸ் மிலிட்டரி நிறுவனம் வழங்கும் இந்த சைக்கிள்கள் இந்திய வாகன சந்தைகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆரம்பகட்டத்தில், டேங்க், பெட்ரோல் மற்றும் ட்ரூப்பர் என்ற பெயர்களில் 3 புதிய மாடல்களை அறிமுகம் செய்கின்றனர். இந்த 3 மாடல்களின் கீழேயும் சுமார் 10-க்கும் மேற்பட்ட வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலக்கு;
ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள் உற்பத்தி நிறுவனம், முதல் வருடத்திற்குள் சுமார் 10,000 சைக்கிள்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அறிமுகம்;
ஃபயர்ஃபாக்ஸ் பைசைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் 95 நகரங்களில் உள்ள 200 டீலர்ஷிப்கள் மூலம் ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும்.

வருங்கால திட்டம்;
வருங்காலங்களில் இந்நிறுவனம், மேலும் பல்வேறு புதிய சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

இலக்கு வாடிக்கையாளர்கள்;
ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள்களின் டிசைன், லுக் மற்றும் இதர அம்சங்கள், இளைய சைக்கிள் ஆர்வலர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இளைய தலைமுறையினர் தான் இந்த ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள் நிறுவனத்தின் இலக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

விலை;
ஸ்விஸ் மிலிட்டரி ரேஞ்ச் சைக்கிள்கள், 12,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இறுதி கருத்து;
சைக்கிள் இயக்குவது நல்ல உடற்பயிற்சியாகவும், உடல்நலத்திற்கு மிகுந்த அளவில நன்மை பயக்கும் விஷயமாகவும் உள்ளது.
இதன் அடிப்படையில், ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள்கள் சிறந்த தயாரிப்புகளாக உள்ளன என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;
போக்குவரத்து நெரிசலை குறைக்க மடக்கக்கூடிய சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்
புதிய டிரெக் சூப்பர் சைக்கிள்: விலை ஜஸ்ட் ரூ2.35 லட்சம்தான்!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








