ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகியது

By Ravichandran

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

வகைபடுத்தல்...

வகைபடுத்தல்...

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள், ஸ்போர்ட்ஸ்டர் ரேஞ்ச்-சிற்கு கீழே வகைபடுத்தபட்டுள்ளது. இது தான் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பாக 2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்ட முதல் 2 சக்கர வாகனமாகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள், 1,202 சிசி, ஏர்-கூல்ட், எலக்ட்ரானிக் சீக்வென்ஷியல் போர்ட் ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் வசதி கொண்ட எவல்யூஷன் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

எடை;

எடை;

இந்த ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள், வெரும் 268 கிலோகிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. பிற ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் மாடல்களின் எடைகளோடு ஒப்பிடுகையில், இது மிகவும் எடை குறைந்ததாக விளங்குகிறது.

1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் பற்றி...

1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் பற்றி...

சூப்பர் லோ குரூஸர்-ன் வடிவமைப்பு போன்றே, இந்த ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளும், இந்தியாவின் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையிலான நவீன கூறுகளை கொண்டிருக்கும்.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள், ஃபார்டி-எய்ட் மற்றும் அயர்ன் 883 ஸ்போர்ட்ஸ்டர் ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்களுடன் சேர்த்து விற்கபடும்.

விலக்கி கொள்ளபட்ட மாடல்?

விலக்கி கொள்ளபட்ட மாடல்?

முன்னதாக, சூப்பர் லோ குரூஸர் மோட்டார்சைக்கிளை, இந்திய சந்தைகளில் விற்கபடும் 2 சக்கர வாகனங்களின் பட்டியலில் இருந்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விலக்கி கொண்டது.

வழங்கபடும் விதம்...

வழங்கபடும் விதம்...

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட் என்ற முறையில் அறிமுகம் செய்யபட உள்ளது. சிகேடி முறையில், வாகனங்களின் பெரும்பாலான உபகரணங்கள் இறக்குமதி செய்யபட்டு, இங்கு இந்தியாவில் அசம்பிள் செய்யபடும்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

தற்போதைய நிலையில், 8 மோட்டார்சைக்கிள்கள், ஹரியானாவின் பவல் என்ற இடத்தில் உள்ள ஹார்லி டேவிட்சன் உற்பத்தில் ஆலை தயார் செய்யபடுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் ஹார்லி?

ஆட்டோ எக்ஸ்போவில் ஹார்லி?

துரதிர்ஷ்டவசமாக, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கு கொள்ளாது என அறிவிக்கபட்டுள்ளது.

விலை;

விலை;

அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இரு சக்கர நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்த ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளை, 8.9 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)) விலையில் விற்பனை செய்கிறது.

இதர தொர்புடைய செய்திகள்;

இதர தொர்புடைய செய்திகள்;

துபாய விடுங்கோ... ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய குஜராத் போலீஸ்!

2016-ஆம் ஆண்டில் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை ஹார்லி டேவிட்சன் உயர்த்தியது

ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Harley-Davidson India has launched their all-new Motorcycle in India, which is called the Harley-Davidson 1200 Custom Harley Davidson Motorcycle. This 1200 Custom Motorcycle is classified under the Sportster range and is the first product launch by Harley-Davidson for 2016. Harley-Davidson is not participating at the 2016 Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X