2016-ஆம் ஆண்டில் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை ஹார்லி டேவிட்சன் உயர்த்தியது

Written By:

2016-ஆம் ஆண்டில் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பாக அறிவிக்கபட்டுள்ள இந்த விலை உயர்வுகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விலை ஏற்றதிற்கு தெரிவிக்கபடும் காரணம்...

விலை ஏற்றதிற்கு தெரிவிக்கபடும் காரணம்...

இந்திய சந்தைகளில் விற்கபடும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2016-ஆம் ஆண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களின் உயர்த்தபட்டுள்ளது. சமீபத்தில் தான் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருந்தன.

இந்த விலை ஏற்றங்களுக்கு, உள்ளீடுகளும் விலை உயர்வுகளும், அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக கூறப்படுகிறது.

விலை ஏற்றதின் அளவுகள்;

விலை ஏற்றதின் அளவுகள்;

அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் சார்பாக தயாரிக்கபடும் மோட்டார்சைக்கிள்கள், வாடிக்கையாளர்கள் மூலம் தேர்வு செய்யபடும் மாடல்களை பொருத்து 1,500 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர்.

இந்தியாவில் விற்கபடும் மாடல்கள்;

இந்தியாவில் விற்கபடும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், 2016-ஆம் ஆண்டில் 12 மாடல்கள் மட்டுமே இந்திய சந்தைகளில் விற்கபட உள்ளது.

அதிக விலை ஏற்றம் செய்யபட்ட மாடல்கள்;

அதிக விலை ஏற்றம் செய்யபட்ட மாடல்கள்;

சமீபத்தில் தான், ஸ்ட்ரீட் 750, ஐயர்ன் 883, ஃபார்ட்டி-எய்ட், ஸ்ட்ரீட் பாப் மற்றும் ஃபேட் பாப் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை, ஹார்லி டேவிட்சன் மேம்படுத்தி வழங்கியது.

இந்த மோட்டார்சைக்கிள்கள், அந்நிறுவனத்தின் டார்க் கஸ்டம் பிரிவில் இருந்து பிரத்யேகமான கவனத்தை பெற்றது. 2016-ஆம் ஆண்டில், இந்த டார்க் கஸ்டம் மாடல்கள் தான் அதிகமான விலை உயர்வுகளை கண்டுள்ளது.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

2016-ஆம் ஆண்டில் மேம்படுத்தி வழங்கபடும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 - 4.52 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் ஐயர்ன் 883 - 7.37 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி-எய்ட் - 9.12 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் - 10.64 லட்சம் ரூபாய்

இங்கு குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலைவிவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

2016-ஆம் ஆண்டில் மேம்படுத்தி வழங்கபடும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் - 13.05 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் - 15.15 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் பிரேக்அவுட் - 16.40 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்டெய்ல் கிளாசிக் - 16.60 லட்சம் ரூபாய்

இங்கு குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலைவிவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 3;

விலை விவரங்கள் - 3;

2016-ஆம் ஆண்டில் மேம்படுத்தி வழங்கபடும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஹார்லி டேவிட்சன் நைட் ராட் - 21.92 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் - 25 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் கிலட் ஸ்பெஷல் - 29.76 லட்சம் ரூபாய்

ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடெட் - 49.57 லட்சம் ரூபாய்

இங்கு குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலைவிவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

கைவிடபட்ட மாடல்கள்;

கைவிடபட்ட மாடல்கள்;

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் லோ குரூஸர் இந்திய சந்தைகளில் விற்கபடும் மாடல்களில் இருந்து விலக்க பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டுக்கான திட்டங்கள்;

2016-ஆம் ஆண்டுக்கான திட்டங்கள்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், வேறு சில ஈர்க்கும் வகையிலான தயாரிப்புகளை காட்சிபடுத்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதோடு மட்டுமல்லாமல், வேறு சில புதிய மற்றும் குரூஸர்-களையும், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2016-ல் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹார்லி டேவிட்சன் தொடர்புடைய செய்திகள்

துபாய விடுங்கோ... ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய குஜராத் போலீஸ்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Harley-Davidson 2016 Indian Models prices are announced. Harley-Davidson has increased and revised the prices of their 2016 models, which are being sold in the Indian market. The ranges of the Harley-Davidson's price hikes are from Rs. 1,500 to Rs. 30,000. Only 12 models are sold in the Indian market during 2016.
Story first published: Saturday, January 9, 2016, 14:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark