ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடர் இந்தியாவில் ஒளிபரப்பாகும்

By Ravichandran

'ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ்' என்ற தொடர் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. உலக அளவில் கோடிக்கணக்கான நிறுவனங்களும் நிறுவனர்களும் உள்ளனர். இதில் சிலரின் சரித்திரம் அல்லது சில நிறுவனங்களின் சரித்திரம் மக்களின் மனதிற்கு நெருக்கமானவையாக இருக்கும். அதன் அடிப்படையில், படங்கள் அல்லது குறும்படங்கள் அல்லது தொடர் எடுக்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு மினி சிரீஸ் எனப்படும் குறும் தொடர் வடிவில் ஒளிபரப்பாக உள்ள 'ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ்' தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ்...

ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ்...

ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் என்ற இந்த குறும் தொடர், தி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது 3 பாகமாக ஒளிபரப்ப்படுகிறது. இந்த ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடர், முக்கியமாக அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்தாபனம் பற்றிய தகவல்கள் கொண்டிருக்கும்.

முக்கிய விஷயம்;

முக்கிய விஷயம்;

ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடர், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்தாபகர்களான வால்டர் டேவிட்சன், ஆர்தர் டேவிட்சன் மற்றும் அவர்களின் சினேகிதரான பில் ஹார்லி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

ஒளிபரப்பாகும் நேரம்;

ஒளிபரப்பாகும் நேரம்;

ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடரின் முதல் பாகம், இந்தியாவில் அக்டோபர் 14, 2016 அன்று இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படும். இதன் அடுத்த 2 பாகங்கள், அடுத்தடுத்து 2 வெள்ளிக்கிழமைகளில் அதே நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு முடிக்கப்படும்.

கதை;

கதை;

இந்த குறும் தொடரில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்தாபகர்கள், இந்த நிறுவனத்தை நிறுவ, அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்கல் மற்றும் சவால்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்புலம்;

பின்புலம்;

ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடரின் கதை, 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தின் பின்புலம் கொண்டுள்ளது. இதன் நிறுவனர்கள், அமெரிக்காவின் மில்வாக்கி என்ற இடத்தில் ஒரு சிறிய ஷெட்டில் இருந்து எப்படி இந்த நிறுவனத்தை துவக்கினார்கள் என்பது தெளிவாக என்பது விளக்கப்பட்டுள்ளது.

ரேசிங்;

ரேசிங்;

இந்த ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடரில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ரேசிங் கால வாழ்க்கையும் காண்பிக்கப்படும். ரேசிங் உலகில், ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகள், அவற்றின் திடத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கும் மிகவும் புகழ் பெற்றவையாக இருந்தன.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

100 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட காலகட்டத்தில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அடைந்துள்ள சாதனைகள், பல்வேறு பைக்கிங் கிளப்களுடனான கூட்டணி, அமெரிக்க ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தம், கிரேட் டிப்ரஷ்ஷன் எனப்படும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட சாதனை மற்றும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கும், இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கும் இடையே உள்ள போட்டி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடரில் காண்பிக்கப்படும் விஷயங்களின் சிறப்பம்சங்களாக இருக்கும்.

நடிகர்கள்;

நடிகர்கள்;

தி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்படும் இந்த ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடரில், மைக்கல் ஹுய்ஸ்மேன் அவர்கள் வால்டர் டேவிட்சன் பாத்திரத்திலும், பக் ஹால் அவர்கள் ஆர்தர் டேவிட்சன் பாத்திரத்திலும், ராபர்ட் அராமயோ அவர்கள் பில் ஹார்லி பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சாதனை;

சாதனை;

இந்த ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடர், அமெரிக்காவிலும் டிஸ்கவரி சேனலில் செப்டம்பர் 5, 2016-ல் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் தயாரிப்பாளர்கள், இந்த ஹார்லி அன்ட் தி டேவிட்சன்ஸ் குறும் தொடரை, சுமார் 4.4 கண்டு ரசித்ததாக கூறுகின்றனர்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பம்பார்டியர் நிறுவனத்தின் புதிய பயணிகள் விமானம் அறிமுகம்!

கோனிசெக் ஒன்:ஒன் கார் விபத்து: விரிவான தகவல் அறிக்கை வெளியானது...!!

பாரீஸில் விபத்துக்குள்ளாகி உருக்குலைந்த பகானி ஹூய்ரா பேர்ல் ஒன்-ஆஃப் கார்...

Most Read Articles
English summary
The Discovery Channel will soon premiere new show called 'Harley and the Davidsons' in India. This programme is three-part miniseries providing insights into birth of American motorcycle brand- Harley Davidson. First episode will be aired on October 14, 2016, at 9pm IST. This will be weekly series with other two episodes scheduled for next consecutive Fridays. To know more, check here...
Story first published: Friday, October 7, 2016, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X