லெஜெண்ட் ஆன் டூர் என்ற பெயரில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின், மொபைல் டீலர்ஷிப் துவக்கம்

Written By:

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், லெஜெண்ட் ஆன் டூர் என்ற பெயரில், மொபைல் டீலர்ஷிப்பை துவக்கினார்.

லெஜெண்ட் ஆன் டூர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மொபைல் டீலர்ஷிப்;

மொபைல் டீலர்ஷிப்;

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தங்கள் நிறுவனம் சார்பாக முதன் முதலாக, லெஜெண்ட் ஆன் டூர் பெயரில் மொபைல் டீலர்ஷிப்பை துவக்கியுள்ளனர்.

இந்த மொபைல் டீலர்ஷிப், சமீபத்தில் நடந்த ஐபிடபுள்யூ அல்லது இந்தியா பைக் வீக் 2016 நிகழ்ச்சியின் போது காட்சிபடுத்தபட்டது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

இந்த லெஜெண்ட் ஆன் டூர் பெயரில் மொபைல் டீலர்ஷிப்பின் வடிவமைப்பு, டிசி டிசைன் நிறுவனத்தை சேர்ந்த உலக புகழ்பெற்ற இந்திய

ஆட்டோமொபைல் டிசைனர் திலிப் சப்ரியா அவர்களால் வடிவமைக்கபட்டது.

திலிப் சப்ரியா கருத்து;

திலிப் சப்ரியா கருத்து;

"ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்த லெஜெண்ட் ஆன் டூர் வாகனம் வடிவமைத்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது" என இதன் தலைமை வடிவமைப்பாளர் திலிப் சப்ரியா கூறினார்.

"தோற்றத்திலும், உணர்விலும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் டீலர்ஷிப் போன்றதொரு உணர்வை வகையில், லெஜெண்ட் ஆன் டூர் போல் ஒரு வாகனத்தை வடிவமைத்தோம்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அபரிவிதமான பாரம்பரியம், வடிவமைப்பின் போது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக விளங்கியது" என

திலிப் சப்ரியா தெரிவித்தது.

என்ன வசதிகள்?

என்ன வசதிகள்?

லெஜெண்ட் ஆன் டூர் வாகனம், 2016 ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் கொண்டதாக இருக்கும்.

இதோடு மட்டுமல்லாமல், வழக்கமான டீலர்ஷிப்பில் உள்ளது போல் இந்த வாகனத்தில், ஒரிஜினல் உதிரி பாகங்கள், ஆக்சஸரீஸ் மற்றும் மெர்சண்டைஸ் ஆகியவை கொண்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் எம்டி கருத்து;

ஹார்லி டேவிட்சன் எம்டி கருத்து;

லெஜெண்ட் ஆன் டூர் வாகனத்தின் அறிமுகம் குறித்து, ஹார்லி டேவிட்சன் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் விக்ரம் பாவாஹ் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

"ஹார்லி டேவிட்சன், மக்களை எங்கள் பிராண்டை நாடி வர வைப்பதற்கும், லீஷர் மோட்டார்சைக்கிளிங்கின் இனிமைகளை உணரவைப்பதற்கும் புதிய புதிய வழிமுறைகளை கையாளுகிறோம்" என விக்ரம் பாவாஹ் கூறினார்.

"மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், 13 வகையிலான மோட்டார்சைக்கிள்களை கொண்டுள்ளோம். இந்த வாகனங்கள் அனைத்து ரைடர்களின் தேர்வுக்கு ஏற்ப சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான வாகனங்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

பயண விவரம்?

பயண விவரம்?

லெஜெண்ட் ஆன் டூர் மொபைல் டீலர்ஷிப் வாகனம், ஃபிப்ரவரி மாதம் இறுதியில் துவங்கி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளது.

முதற்கட்டமாக, மும்பையில் இருந்து துவங்கும் இந்த பயணம், பின்னர் பூனே, கோவா, பெங்களூரூ மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கோயம்புத்தூரில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் ஷோரூம் திறப்பு

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகியது

ஹார்லி டேவிட்சன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Harley-Davidson has unveiled their first ever mobile dealership for India at the 2016 India Bike Week. This mobile dealership named as the 'Legend on Wheels' the bus was designed by Indian automobile designer Dilip Chhabria of DC Design. The 'Legend On Wheels' will tour to the cities of Mumbai and Coimbatore in March.
Story first published: Friday, February 26, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark