2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் நவம்பரில் அறிமுகம்

Written By:

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2017 ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், பல்வேறு மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர்...

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர்...

2017 ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ்டர் வகையை சேர்ந்ததாகும். இது ஃபார்ட்டி-எய்ட் குரூஸர் மோட்டார்சைக்கிளை போன்றே காட்சியளிக்கிறது.

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர், முன்னதாக சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர், 1,200 சிசி, வி-ட்வின், ஏர்-கூல்ட் எவல்யூஷன் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் உச்சபட்சமாக 103 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் டோயூன் செய்யப்பட்டுள்ளது.

ஏபிஎஸ்;

ஏபிஎஸ்;

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படும்.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் குறுகிய ஸ்விங்ஆர்ம் உடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹார்லி டேவிட்சன் நிறுவன இஞ்ஜினியர்கள், இதன் ஹேண்ட்லிங், பிரேக்கிங் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை கூட்டியுள்ளனர்.

உற்பத்தி;

உற்பத்தி;

உற்பத்தி செலவுகளை குறைக்கும் வகையில், 2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

விலை;

விலை;

2017 ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள், சுமார் 10 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Harley-Davidson would launch its all-new Roadster Motorcycle in India during November. Roadster is to be locally assembled by Harley-Davidson to keep costs in check. It is based on Harley-Davidson's Forty-Eight model. Roadster hails from Harley-Davidson's Sportster category. 2017 Roadster will have Anti-lock Braking System (ABS) as standard equipment. To know more, check here...
Story first published: Wednesday, September 14, 2016, 10:14 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos