ஏபிஎஸ் வசதியுடன் 2017 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 குரூஸர் விரைவில் அறிமுகம்

Written By:

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், ஏபிஎஸ் வசதியை ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்ட 2017 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் பிரிமியம் மோட்டார்சைக்கிள்களுக்காக மிகுந்த புகழ் பெற்றுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விரைவில் வழங்க உள்ள ஏபிஎஸ் வசதி கொண்ட 2017 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

மேம்பாடு;

மேம்பாடு;

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தற்போதைய நிலையில் ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் உற்பத்தி செய்து, இந்திய சந்தைகளிலும், பிற சர்வதேச சந்தைகளிலும் விற்பனை செய்து வருகிறது.

வெளியாகி வரும் செய்திகள் படி, ஹார்லி டேவிட்சன் நிறுவனம், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் வசதியை ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்ட 2017 ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளனர்.

குறைபாடுகள்;

குறைபாடுகள்;

ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிள், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பலவீனமான பிரேக் அமைப்பினால் அவப்பெயர் பெற்று வந்தது. இந்நிலையில், 2016 ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளில் பிரேக் ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்தியது. எனினும், இதில் ஏபிஎஸ் வசதி, தேர்வு முறையில் கூட வழங்கப்படவில்லை.

இதற்கிடையில், இந்திய அரசு, 2017-ஆம் ஆண்டு முதல் அனைத்து டூ வீலர்களிலும் ஏபிஎஸ் வசதியை கட்டாயாமாக ஆக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் வசதியை இணைக்க முடிவு செய்துள்ளனர்.

புதிய நிறங்கள்;

புதிய நிறங்கள்;

2017 ஸ்ட்ரீட் 750 குரூஸர், ஏபிஎஸ் வசதியுடன் புதிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

இதர மாற்றங்கள்;

இதர மாற்றங்கள்;

2017 ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளில் புதிய ஹார்லி டேவிட்சன் சின்னமும் பதிக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த 2017 ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்ட கஸ்டமைசேஷன் தேர்வுகளுடன் கிடைக்கும்.

முக்கிய மாற்றங்கள்;

முக்கிய மாற்றங்கள்;

2017 ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளில், ஹார்லி டேவிட்சன் ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டமும் சேர்க்கப்படும்.

இதன் மூலம், இந்த மோட்டார்சைக்கிள் ரைடர்கள், சாவி இல்லாமலேயே இயக்க முடியும். இந்த ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம், கார்களில் உள்ள கீ லெஸ் ஸ்டார்ட்/ ஸ்டாப் பங்க்ஷன் போல் இயங்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜினில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படாது. இதனால், இதன் இஞ்ஜின் மற்றும் செயல்திறனில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது.

ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிள், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் விற்கும் டூ வீலர்களில் மிகவும் புகழ்பெற்ற வாகனமாக உள்ளது.

விலை;

விலை;

2017 ஸ்ட்ரீட் 750 குரூஸர் மோட்டார்சைக்கிள், தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், சிறிய அளவிலான கூடுதல் விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகியது

ஆற்றல் மிக்க புதிய எஞ்சினை அறிமுகம் செய்த ஹார்லி டேவிட்சன்!

English summary
2017 Harley-Davidson Street 750 will get ABS as Standard feature in India. Harley-Davidson currently manufactures and exports Street 750 cruiser from India. Harley Davidson will update Street 750 with ABS (Anti-lock Braking System) as standard equipment. New colour options will also be on offer with 2017 Street 750 cruiser. To know more about Street 750 cruiser, check here...
Story first published: Wednesday, September 7, 2016, 13:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark