புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிள், செப்டம்பர் 26-ல் இந்தியாவில அறிமுகம்

By Ravichandran

புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிள், செப்டம்பர் 26-ல் இந்தியாவில விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின், உலகின் முன்னோடி டூ வீலர் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான வாகங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்தியாவில் ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை தசரா, தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும், தங்களின் புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிளை பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்கின்றனர். பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யபடுவதனால், இந்நிறுவனத்தின் விற்பனை மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

நிகழ்தலைமுறை ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிள், நீண்ட காலமாக எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படாமல், விற்பனையில் உள்ளது. முன்னதாக, பெயின்ட் ஸ்கீம்கள் மற்றும் டீகேல் தேர்வுகள் ஆகிய வடிவில் சிறிய அளவிலான மேம்பாடுகள் மட்டுமே செய்யப்பட்டது. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிளில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

தற்போதைய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிளில், சிங்கிள் சிலிண்டர் உடைய 149.2 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் உள்ளது. இந்த இஞ்ஜின், 13.4 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 12.80 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

ஐ3எஸ் தொழில்நுட்பம்;

ஐ3எஸ் தொழில்நுட்பம்;

புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிள், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஐ3எஸ் எனப்படும் ஐடில்-ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் (i3S (idle-stop-start) technology) கொண்டிருக்கும். இந்த ஐ3எஸ் தொழில்நுட்பம், மைலேஜ் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும்.

போட்டி;

போட்டி;

விரைவில் அறிமுகம் செய்யப்படும் புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிள், ஹோண்டா யூனிகார்ன் மற்றும் பஜாஜ் பல்சர் 150 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

புதிய ஹீரோ அச்சீவர் மோட்டார்சைக்கிள், அதன் போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில், நல்ல சவாலான விலையிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், வருங்காலங்களில் பல்வேறு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களையும், பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்ட மாடல்களையும் அடுத்தடுத்து அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2017-ல் ஹீரோ மோட்டோகார்ப், 10 பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டம்

ஹீரோ மோட்டோகார்ப்பின் 3 டான் மோட்டார்சைக்கிள்களின் வீடியோ கசிந்தது

டிவிஎஸ் நியூ விக்டர் Vs ஸ்பிலெண்டர் ஐ-ஸ்மார்ட்... உள்ளத்தைக் கொள்ளையடிக்கப் போகும் மாடல் எது?....

Most Read Articles
English summary
Hero MotoCorp has now confirmed that, all-new Achiever motorcycle will be launched on September 26th. New Achiever motorcycle is expected to undergo extensive cosmetic updates. 2016 Achiever by including its i3s (Integrated Start Stop System) technology. All-new Achiever will rival Honda Unicorn and Bajaj Pulsar 150 models. To know more, check here...
Story first published: Friday, September 23, 2016, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X