ஹீரோ டேஷ் ஸ்கூட்டர் இலங்கையில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கும் டேஷ் ஸ்கூட்டர் இலங்கையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர்...

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர்...

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர், இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரித்து வழக்ங்கும் ஸ்கூட்டர் ஆகும்.

இந்த ஸ்கூட்டர் முதன் முதலாக 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கையில் அறிமுகம்;

இலங்கையில் அறிமுகம்;

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர், இலங்கை வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் என்ற பெயரில் வழங்கும் ஸ்கூட்டர் தான் இலங்கை வாகன சந்தைகளுக்கு என டேஷ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் பொருத்தபட்டுள்ள அதே இஞ்ஜின் தான் ஹீரோ டேஷ் ஸ்கூட்டரிலும் பொருத்தபட்டுள்ளது.

ஹீரோ டேஷ் ஸ்கூட்டரில், சிங்கிள் சிலிண்டர் உடைய 110.9 சிசி ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 8.31 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8.30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

அதிகபட்ச வேகம்;

அதிகபட்ச வேகம்;

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர், உச்சபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

வண்ண தேர்வுகள்;

வண்ண தேர்வுகள்;

இலங்கை சந்தைகளுக்கான ஹீரோ டேஷ் ஸ்கூட்டர், டியூவல்-டோன் வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹீரோ டேஷ் ஸ்கூட்டர், ஸ்போர்ட்ஸ் ரெட், டெக்னோ புளு மற்றும் வைப்ரன்ட் ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த தேர்வு, விஎக்ஸ் ட்ரிம் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

ஹீரோ டேஷ் ஸ்கூட்டரின் எல்எக்ஸ் வேரியன்ட், சிங்கிள் / சாலிட் பெயின்ட் ஸ்கீமில் கிடைக்கும்.

இந்தியாவிலும் அறிமுகம்;

இந்தியாவிலும் அறிமுகம்;

இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், சமீபத்தில் தான், இந்த ஹீரோ டூயட் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் (டேஷ்) ஆகிய 2 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்தது.

ஹீரோ நிறுவனம் வழங்கும் இந்த 2 ஸ்கூட்டர்களும், இந்திய வாகன சந்தைகளுக்கும், சர்வதேச வாகன சந்தைகளுக்கும் ஏற்ற வகையிலான வருங்கால நோக்குடைய டிசைன் சித்தாந்தம் கொண்டுள்ளது.

விலை விவரங்கள் - இந்தியா;

விலை விவரங்கள் - இந்தியா;

ஹீரோ டேஷ் (மேஸ்ட்ரோ எட்ஜ்) ஸ்கூட்டரின் பேஸ் வேரியன்ட் இந்தியாவில், 50,551 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகிறது.

விலை விவரங்கள் - இலங்கை;

விலை விவரங்கள் - இலங்கை;

ஹீரோ டேஷ் (மேஸ்ட்ரோ எட்ஜ்) ஸ்கூட்டரின் எல்எக்ஸ் வேரியன்ட், 2.26 லட்சம் இலங்கை ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

ஹீரோ டேஷ் (மேஸ்ட்ரோ எட்ஜ்) ஸ்கூட்டரின் விஎக்ஸ் வேரியன்ட், 2.34 லட்சம் இலங்கை ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹீரோ டேஷ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள்... விரைவில்...!!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது - விபரம்!

ஹீரோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Hero MotoCorp launched Dash Scooter for Sri Lanka. Hero MotoCorp showcased Dash scooter for very first time at 2014 Delhi Auto Expo in Delhi. Now, Dash scooter has been introduced in Sri Lankan market. Hero MotoCorp has renamed Maestro Edge as the Dash for Sri Lanka. Dash will attain top speed of 85 km/h. Dash has same engine as that of Maestro Edge. To know more, check here...
Story first published: Tuesday, July 5, 2016, 7:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark