ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு லித்தியம் அயான் பேட்டரி!

Written By:

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய லித்தியன் அயான் பேட்டரிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உபயோகிக்கபடும், புதிய புதிய பேட்டரி தொழில்நுட்பம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய பேட்டரிகள்;

புதிய பேட்டரிகள்;

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், தங்களின் மாசு ஏற்படுத்தாத ஸ்கூட்டர்களுக்கு, பேட்டரி ரூபத்தில் புதிய மேம்பாடுகளை வழங்கியுள்ளது.

2016-ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, இந்த ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு லித்தியம் இயான் பேட்டரிகள் வழங்கபட்டுள்ளது.

அறிமுகத்திற்கான குறிக்கோள்;

அறிமுகத்திற்கான குறிக்கோள்;

இந்தியா முழுவதும் நிலவும் வேறுபட்ட மற்றும் கடுமையான நிலவரங்களை சமாளிக்கு பொருட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட இந்த பேட்டரிகள் அறிமுகம் செய்யபடுகிறது.

சார்ஜர்;

சார்ஜர்;

இந்த ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஹீரோ நிறுவனத்திடம் இருந்து புதிய சார்ஜரும் பெறுகிறது.

இந்த சார்ஜரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, உட்புறங்களிலும், வெளிப்புற பயன்பாட்டிற்கும் உபயோகித்து கொள்ளலாம். நமது நாட்டில் எழும் பல்வேறு சவால்களுக்கு உகந்தவைகளாக இந்த தொழில்நுட்பங்கள் விளங்குகிறது.

அறிமுக விழா;

அறிமுக விழா;

இந்த 2016 ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் போது பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ஹீரோ எகோ-வின் எம்டி நவீன் முஞ்ஜால், குளோபல் ஹீரோ எகோ-வின் சீஇஓ சோஹிந்தர் கில் மற்றும் மத்திய அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டெல்லி அரசுடன் கூட்டுமுயற்சி;

டெல்லி அரசுடன் கூட்டுமுயற்சி;

இந்த லித்தியம் இயான் டெக்னாலஜி, டெல்லி அரசுடனான கூட்டுமுயற்சியில் உருவாக்கபட்டுள்ளது.

தனிபட்ட ஆராய்ச்சி;

தனிபட்ட ஆராய்ச்சி;

டெல்லி அரசுடனான கூட்டுமுயற்சிகளோடு மட்டுமல்லாமல், ஹீரோ எலக்ட்ரிக் மேலும் துள்ளிய தீர்வுக்கு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் மாசு உமிழ்வு பிரச்னைக்கு தீர்வாக, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறந்த தீர்வாக அமைகிறது.

ஹீரோ எலக்ட்ரிக்-கின் திட்டம்;

ஹீரோ எலக்ட்ரிக்-கின் திட்டம்;

சமீபத்தில், டெல்லி பகுதியில் ஆட் / ஈவன் சிஸ்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போது, ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், பல்வேறு மக்கள் போக்குவரத்திற்கு உபயோகிக்கும் வகையில் தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கியது.

சிக்கலில் சிக்காத ஸ்கூட்டர்கள்;

சிக்கலில் சிக்காத ஸ்கூட்டர்கள்;

டெல்லி பகுதியில் ஆட் / ஈவன் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த போது, எலக்ட்ரிக் வாகனங்களால் எந்த விதமான மாசு உமிழ்வும் ஏற்படாததால், எந்த விதமான சிக்கலிலும் சிக்கவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய வசதியுடன் ஹீரோ ஈ-ஸ்ப்ரிண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹீரோ எலக்ட்ரிக் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Hero Electric updates their non-polluting Scooter ranges with New Battery Technology. For this year 2016, Hero Electric scooter receives lithium ion batteries as part of their updates. These electric scooter range from Hero, gets an all-new charger also. Hero Electric tells that, these new charger can be used in indoors and outdoors.
Story first published: Tuesday, February 2, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark